ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் ஆலு சாட் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று பல விதங்களில் செய்யலாம். எந்த சாட் ஆனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர்.

-விளம்பரம்-

சாட் வகையில் ஒன்றான ஆலு சாட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். வழக்கமாக சாட் போன்ற உணவுகளை வெளியில் வாங்கி தான் சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் அதனை வீட்டில் செய்வதால் அதிகமாக செய்து சாப்பிடலாம். ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.

- Advertisement -

மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது உருளைக்கிழங்கை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த ஆலு சாட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! இந்த ஆலு சாட் ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன், ரொம்ப மிருதுவாக உள்ள உருளைக்கிழங்கை தட்டில் வைத்து இதனுடன் காரசாரமான மசாலா தூவி, இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
No ratings yet

ஆலு சாட் | Aloo Chaat Recipe In Tamil

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று பல விதங்களில் செய்யலாம். எந்த சாட் ஆனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர். அப்படிப்பட்ட சாட் வகையில் ஒன்றான ஆலு சாட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். வழக்கமாக சாட் போன்ற உணவுகளை வெளியில் வாங்கி தான் சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் அதனை வீட்டில் செய்வதால் அதிகமாக செய்து சாப்பிடலாம். ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Aloo Chaat
Yield: 3 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • உப்பு தேவையான அளவு

புளிப்பு சட்னி செய்ய‌ :

  • புளி எலுமிச்சை அளவு
  • 1/2 டீஸ்பூன் புட் கலர்
  • 1 டீஸ்பூன் சோள‌ மாவு
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

புதினா சட்னி செய்ய :

  • 1 கப் புதினா, கொத்தமல்லி
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு சிறிதளவு
  • 2 பிரெட்
  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 டீஸ்பூன் வெண்டைக்காய்
  • 2 டீஸ்பூன் காரா பூந்தி

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின் உருளைக்கிழங்கு ஆறியதும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • முதலில் புளியை ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் இதனுடன் மிளகாய்த்தூள், சர்க்கரை, புட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
  • பின் ஒரு பவுளில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொதிக்கும் புளிப்பு சட்னியுடன் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சம் பழ சாறு, உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் உப்பு, சாட் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பின் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • ஒரு பவுளில் வதக்கிய உருளைக்கிழங்கு வைத்து அதன்மேல் இனிப்புச் சட்னி, புதினா சட்னி, காரா பூந்தி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பிரட் துண்டுகள்,‌தயிர் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஆலு சாட் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 2.7g | Saturated Fat: 1.5g | Sodium: 4mg | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin A: 15IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!