Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி...

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாயுத்தொல்லை தருகிறது என்ற ஒரு காரணத்துக்காகவே, வாழைக்காயை ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், சிலபொருட்களை அதிகம் சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வந்தால், வாழைக்காய் நன்மை தரும் காய் என்பதை மறந்து விடுகிறோம். வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துவிடும்.

-விளம்பரம்-

வீட்டில் வாழைக்காய் அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைக்காய் கட்லெட்டை செய்யுங்கள். கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.

இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. இதனை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். இதில் உங்கள் விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான வாழைக்காய் கட்லட் நீங்களும் எளிமையான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் சுலபம். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Print
No ratings yet

வாழைக்காய் கட்லெட் | Vazhakkai Cutlet Recipe In Tamil

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாயுத்தொல்லை தருகிறது என்ற ஒரு காரணத்துக்காகவே, வாழைக்காயை ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், சிலபொருட்களை அதிகம் சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வந்தால், வாழைக்காய் நன்மை தரும் காய் என்பதை மறந்து விடுகிறோம். வீட்டில் வாழைக்காய் அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைக்காய் கட்லெட்டை செய்யுங்கள். காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Vazhakkai Cutlet
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 3 வாழைக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

  • முதலில் வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • பின் வேக வைத்த வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • பின் அதனுடன் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கடலைமாவு சேர்த்து அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு பிசைந்து வைத்த மாவை சிறிதளவு எடுத்து கட்லெட் வடிவத்தில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் கட்லெட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 27g | Protein: 7.3g | Fat: 4.2g | Sodium: 4mg | Potassium: 35mg | Fiber: 3.1g | Vitamin A: 2IU | Vitamin C: 17mg | Calcium: 5mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான வாழைக்காய் கார குழம்பை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சாதத்துக்கு பக்காவாக இருக்கும்!