காய்கறியுடன் வெங்காயம் சேர்த்து தான் குழம்பு வகைகளை நம்முடைய வீடுகளில் செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காய் வைத்து ஒரு கார குழம்பு எப்படி வைப்பது என்று தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் வாழைக்காய் தவிர குழம்பு வைக்க காய்கறிகள் வேறு எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் வாழைக்காய் வைத்து இந்த கார குழம்பை வைத்து பாருங்கள். ஒரு குண்டான் சோறு வடித்தாலும், சாப்பாடு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும். சரி வாங்க அந்த சூப்பர் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
இதுவரைக்கும் இப்படி ஒரு வாழைக்காய் வாழைக்காய் வறுவல் தான் செய்து சுவைத்து இருப்பீங்க. இந்த கார குழம்பை யாருமே சாப்பிட்டிருக்க மாட்டீங்க. அந்த அளவிற்கு ருசி தரக்கூடிய பாரம்பரிய சுவையில் ஒரு வாழைக்காய் கார குழம்பை சுலபமாக செய்யலாம். இந்த குழம்பை வைத்து விட்டு சுட சுட சாதமும், ஒரு பக்கம் தொட்டுக்கொள்ள வத்தலும் இருந்து விட்டால் போதும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குவது என்றே தெரியாது. மருத்துவ குணங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்த வாழைக்காய் கார குழம்பை குறிப்பாக மழை காலத்தில் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வாழைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சரி வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.
வாழைக்காய் கார குழம்பு | Raw Banana Kaara Kulambu
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 வாழைக்காய்
- 1 வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
- 1/4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் கசகசா
- 3 முந்திரி
- 1 பட்டை
- 1 கிராம்பு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் வாழைக்காயின் தோலை சீவி விட்டு, அதனை வட்டமாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா மற்றும் முந்திரி முந்திரி போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட்போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் மட்டும் இருக்குமாறு பார்த்து,மீதமுள்ளவற்றை எடுத்து விட்டு. எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை,கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
- நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
- குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து, 6-8 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான வாழைக்காய் குழம்பு ரெடி.
Nutrition
இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட கரூர் எள்ளு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!