- Advertisement -
வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த சாட் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் கடைக்களில் விற்கப்படும் சாட் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில்
இதையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி! சேலம் தட்டு வடை செட்!
- Advertisement -
உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தல்ல. இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் சுவையான தஹி பப்டி சாட் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
-விளம்பரம்-
தஹி பப்டி சாட் | Dahi Papdi Chaat Recipe in Tamil
வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த சாட் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் கடைக்களில் விற்கப்படும் சாட் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தல்ல. இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் சுவையான தஹி பப்டி சாட் செய்யலாம்.
Yield: 4 People
Calories: 125kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய தட்டு
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
இனிப்பு சட்னி
- 8 பேரீச்சம்பழம் விதை நீக்கியது
- புளி சிறு நெல்லிக்காய் அளவு
- 1 Tbsp வெல்லம்
- 1/4 Tsp சீரகப்பொடி
- 1/4 Tsp மிளகாய் தூள்
தஹி பப்டி சாட் செய்ய
- 14 சின்ன தட்டு வடை
- 1 கப் கெட்டியான தயிர்
- 1 Tsp சர்க்கரை
- 3 உருளைக்கிழங்கு வேக வைத்தது
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 3 Tbsp ஒமப்பொடி
- 1 Tsp சாட் மசாலா
- 1/2 Tsp மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 கைப்பிடி கொத்தமல்லி நறுக்கியது
செய்முறை
- முதலில் பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கி கொள்ளுங்கள்.
- பின் புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு தயிரில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு தட்டில் தட்டுவடைகளை வைத்து, அதன் மேல் சிறிது மசித்த உருளைக்கிழங்கு வைக்கவும்.
- பின் அதன் மேல் சிறிது வெங்காயத்தை வைத்து, மேலே சிறிது தயிரை ஊற்றி, உப்பு தூவி, இனிப்பு சட்னியை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவினால், தஹி பப்டி சாட் ரெடி.
Nutrition
Serving: 400G | Calories: 125kcal | Carbohydrates: 33g | Protein: 7g | Cholesterol: 1mg | Potassium: 152mg | Sugar: 2g | Iron: 1.5mg