சேலம் தட்டு வடை செட்

By: PREM KUMAR

12 தட்டை 1 கேரட் துருவியது 1 பீட்ரூட் துருவியது 1/2 மாங்காய் துருவியது 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது கொத்த மல்லி சிறிது 1/4 கப் சாட் மாசாலா 1/4 கப் கார சட்னி 1/4 கப் புதினா சட்னி 1 tbsp எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு

தேவையானவை

Flight Path

முதலில் நாம் எடுத்துக் கொண்ட கேரட், பீட்ரூட், மாங்காய் இந்த முன்று பொருட்களையும் துருவி கலந்து கொள்ளுங்கள்.

செய்முறை: 1

Flight Path

அதன் பின்பு இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

செய்முறை: 2

Flight Path

அதன் ஒரு தட்டையை எடுத்துக் கொண்டு அதன் மீது சிறிதளவு காரச் சட்னி தடவி நாம் தயார் செய்து வைத்த காய்கறி கலவையை இதன் மேல் சிறிது வைக்கவும்.

செய்முறை: 3

Flight Path

பின்பு அதற்கு மேல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிறிது வைத்து அதன் மேல் நாம் வைத்திருக்கும் சாட் மசாலாவை மழை சாரல் போல் தூவி விடவும்.

செய்முறை: 4

Flight Path

பின் நறுக்கிய கொத்தமல்லி இலையை சிறிது மேல் வைக்கவும். அதன் பின்பு கையில் இன்னொரு தட்டையை எடுத்து கொண்டு.

செய்முறை: 5

Flight Path

அதன் மேல் நாம் வைத்திருக்கும் புதினா சட்னியை தடவ காய்கறியின் மேல் வைத்து மூடி விடவும்.

செய்முறை: 6

Flight Path

அவ்வளவுதான் காரசாரமான சுவையில் சேலம் தட்டுவடை இனிதே தயாராகிவிட்டது குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுங்கள்

Flight Path