ஆலு பாலக் பக்கோடா இனி இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!
பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஆல
பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஆலு பாலக் கீரை பக்கோடா. பொதுவாக வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்கறிகளை கொண்டு பக்கோடா செய்வது வழக்கம். இதை ஆரோக்கியமானதாக மாற்ற பக்கோடாவுக்கான மாவில் கொஞ்சம் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். கீரையை பொரியல் செய்து கொடுத்தாலோ கடைந்து கொடுத்தாலோ குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி மொறு மொறுன்னு ஸ்னாக்ஸ் ஆக பக்கோடா செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
கீரைகளில் பல சத்துக்கள் நிறைந்தாலும் குழந்தைகள் இதனைச் சாப்பிட விரும்பமாட்டார்கள். எனவே அவர்களுக்கு ஏற்றவாறு ருசியான மற்றும் மொறு மொறு கீரை பக்கோடோ செய்து தரலாம். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை இப்படித்தான் சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாற்றி கொடுக்க வேண்டும். உருளை கிழங்கு என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும்? அதோடு கீரை சேர்த்து ஒரு மொறு மொறு ஸ்நாக். கீரையும் அவ்வளவாக பிடிக்காதவர்களும் இருப்பார்கள் இல்லையா. பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. குளிர்கால மாலை நேரத்தில் ஏதாவது சூடாக ஸ்நாக் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். ஆலு பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மொறு மொறு ருசியான முட்டைகோஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!