பணம் சேர தண்ணீரில் போட வேண்டிய ஒரு பொருள்!!
இந்த உலகில் பணத்தை தவிர வேறு எதற்குமே அதிகமான முக்கியத்துவம் கிடையாது. பணம் பத்தும் செய்யும் என்று பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். அதன்படி தான் நம்முடைய வாழ்க்கையும் இருக்கும் பணமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் வாழவே முடியாது ஆனால் நியாயமான முறையில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நம்
இந்த உலகில் பணத்தை தவிர வேறு எதற்குமே அதிகமான முக்கியத்துவம் கிடையாது. பணம் பத்தும் செய்யும் என்று பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். அதன்படி தான் நம்முடைய வாழ்க்கையும் இருக்கும் பணமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் வாழவே முடியாது ஆனால் நியாயமான முறையில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நம்மிடம் நிலைத்திருக்கும். பணத்தை பல வழிகளில் நேர்மையாக சேர்ப்பதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டிய ஒரு பொருளை பற்றி பார்க்கலாம்.
மகாலட்சுமியின் அம்சம்
பணம் என்பது மகாலட்சுமி அம்சமாக விளங்க கூடியது. மேலும் சுக்கிர பகவானின் அம்சமாகவும் விளங்க கூடியது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு நமக்கு படிப்பும் வேலையும் தொழிலும் தேவைப்படும் ஆனாலும் அதையும் மீறி மகாலட்சுமியின் அருளும் சுக்ர பகவானின் அம்சமும் இருந்தால் பணம் என்றுமே நம்மிடம் இருக்கும். என்னதான் நேர்வழியில் சம்பாதித்தாலும் புத்தி கூர்மையை பயன்படுத்தி சம்பாதித்தாலும் சில சமயங்களில் நம்மிடம் பணம் தங்காது. அந்த வேலையில் பணம் சம்பாதிக்க முடியாத சூழ்நிலையில் இந்த ஒரு பொருளை தண்ணீரில் சேர்த்து விட்டாலே போதும் பணத்தடைகள் நீங்கிவிடும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கண்ணாடி பாட்டில் தேவைப்படும் அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் வெள்ளை மொச்சையை எடுத்து நம்முடைய கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரலை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் போட வேண்டும். தொடங்கியியல் நாட்களுக்கு ஒவ்வொரு மொச்சையாக அதில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய நாள்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை என்ற சுக்கிர ஹோரையில் வீட்டின் வட கிழக்கு மூலையில் செய்தால் நல்லது. பரிகாரத்தை செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டில் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றிவிட்டு அதில் உள்ள மச்சைகளை பறவைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியின் அருளும் சுக்கிர பகவானின் அம்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமியை வசியம் செய்ய மற்றும் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க இந்த பரிகாரத்தை மட்டும் வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள்!!