Advertisement
அசைவம்

சண்டே ஸ்பெஷல் நெத்திலி மீன் திதிப்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Advertisement

அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த நெத்திலி மீனில் புரதம், ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல் சமைக்க போகின்றோம். இதன் பெயர் நெத்திலி மீன் திதிப்பு. தித்திப்பு என்றதும் வெல்லம் சேர்த்து சர்க்கரை சேர்த்து செய்ய போகின்றோம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்பு ரெசிபிங்க.

பாரம்பரியமான முறையில் செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது. வாருங்கள் அப்படி கிராமத்து சுவையில் மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய இந்த நெத்திலி மீன் திதிப்பு குழம்பை செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் குழம்பை கற்றுக் கொள்வோம்.

Advertisement
Advertisement

நெத்திலி மீன் திதிப்பு | Anchovies Fish Gravy

Print Recipe
அசைவ வகைகளிலேநம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன,சின்ன மீன் வகைகளில் தான்  தேவையான சத்துக்கள்அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த நெத்திலி மீனில் புரதம், ஆனால் இதன் சுவையோஅவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி
Advertisement
சேர்க்காமல் சமைக்க போகின்றோம்.இதன் பெயர் நெத்திலி மீன் திதிப்பு. தித்திப்பு என்றதும் வெல்லம் சேர்த்து சர்க்கரைசேர்த்து செய்ய போகின்றோம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்புரெசிபிங்க. பாரம்பரியமான முறையில்செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Anchovies Fish Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ நெத்திலி மீன்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி பெரியது
  • 4 பச்சை மிளகாய்
  • 5 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1/2 கப் தேங்காய் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை சிறிது
  • பட்டை, லவங்கம், சோம்பு சிறிது
  • 50 மில்லி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

Instructions

  • நெத்திலியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு கலந்து பிரட்டி வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும்,
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
  • இதில் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
  • இதில் மீனை சேர்த்து மூடி வேக விடவும். கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான நெத்திலி மீன் திதிப்பு தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Sodium: 380mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

5 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

15 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

22 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago