Advertisement
அசைவம்

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு மாறுதலாக இருக்கும் இந்த ஆந்திரா சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒரு கிரேவியாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு செய்து பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி ?

Advertisement

நம்ம ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் மற்றும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசியில் இந்த ஆந்திரா ஸ்டைலில் சிக்கனை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் கிரேவி | Andhra Spicy Chicken Recipe In Tamil

Print Recipe
நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு மாறுதலாக இருக்கும், சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு காண இருக்கிறோம். நம்ப ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம்
Advertisement
இந்த வாரம் கடைசில் இந்த ஆந்திரா ஸ்டைலில் சிக்கனை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course கிரேவி
Cuisine Indian, TAMIL
Keyword spicy chicken, ஆந்திரா ஸ்பைஸி சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 278

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • ½ கிலோ சிக்கன்
  • 2 பெரியவெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • ½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி தனி தனியாக மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சிக்கனை போட்டு நன்கு வதக்கவும்.
  • அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு கிளறவும்.
  • பச்சை வாசனை போனதும், அதில் அரைத்த தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • சிக்கன் அரைவேக்காடு வெந்தவுடன் அதில் மல்லி தூளை சேர்க்கவும். பிறகு கொதித்தவுடன் அதில் அரைத்த வெங்காயம் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு மசாலா வற்றும் வரை மூடி வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆந்திர ஸ்பைசி சிக்கன் தயார்.
  • இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும்.

Nutrition

Serving: 500gram | Calories: 278kcal | Protein: 57g | Saturated Fat: 4.5g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 487mg | Sugar: 6.7g
Advertisement
swetha

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

2 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

5 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

6 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

10 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

10 மணி நேரங்கள் ago