நவகிரக பாதிப்பை நீக்கக்கூடிய ஆஞ்சநேயர் வழிபாடு!
ராம பக்தரான ஆஞ்சநேயர் நவகங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடியவர் பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கக்கூடிய இவரை நாம் வழிபட்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் அதே சமயத்தில் தைரியத்தையும் மனதிற்கு நிம்மதியையும் வழங்கக்கூடியவர்தான் ஆஞ்சநேயர் நாம் ம
ராம பக்தரான ஆஞ்சநேயர் நவகங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடியவர் பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கக்கூடிய இவரை நாம் வழிபட்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் அதே சமயத்தில் தைரியத்தையும் மனதிற்கு நிம்மதியையும் வழங்கக்கூடியவர்தான் ஆஞ்சநேயர் நாம் முழுமனதோடு அவரை வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல்களை நிச்சயமாக நிறைவேற்றுவார். தாயின் மீது அதிகமான பாசம் கொண்டவராகவும் ராமருடைய தீவிர பக்தராகவும் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் ராம நாமத்தை உச்சரித்தால் போதும் அந்த இடத்திற்கு ஓடோடி வந்து அவரும் நம்முடன் சேர்ந்து ராமரை வழிபடுவார். காரிய தடைகளை நீக்கக்கூடியவராகவும் ஆஞ்சநேயர் உள்ளார் எனவே இவரை வழிபடுவதால் நவகிரக தோஷங்களை எப்படி நீக்குவது என்பதை பற்றி பார்க்கலாம்.
நவகிரக தோஷத்தை நீக்க செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது கிராம்பு. இந்த கிராம்பை சிவப்பு நிற நூலால் பூ கட்டுவது போல கட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு கொண்டு போக வேண்டும் அங்கு ஆஞ்சநேயரை 21 முறை வலம் வந்த பிறகு அந்த மாளிகை ஆஞ்சநேயருக்கு கொடுத்து சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் நாம் வேண்டிய வேண்டுதல்கள் கிடைக்கும் மேலும் நவகிரக பாதிப்பால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
இந்த வழிபாட்டை செய்ய வேண்டிய கால அளவு
இதனை 21 நாட்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் கோவில் அருகில் இல்லை என்றால் வீட்டில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு இந்த கிராம்பு மாலையை போட்டு வழிபடலாம். ஒரு நாள் சாற்றி வழிபட்ட கிராம்பு மாலையை பத்திரமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் புதிதாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். 21 நாட்கள் முடிந்த பிறகு அந்த கிராம்பை தண்ணீரை சேர்த்து அந்த தண்ணீரை அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். 21 நாட்களும் முழுவதுமாக விரதம் இருந்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வேண்டிய வேண்டுதல்களில் கிடைப்பதோடு நவகிரக தோஷங்களும் நீங்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் போதும் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்!