வார ராசிபலன் 05 ஏப்ரல் 2026 முதல் 11 ஏப்ரல் 2026 வரை!!
மேஷம் இந்த வாரம் உங்கள் மனதிற்கு ஒரு புதிய தெளிவையும், ஆன்மீக பலத்தையும் தரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தவித்த வேலைகளை இந்த வாரம் வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பெரிய ஆதரவும், புதிய தொடர்புகளும் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும
மேஷம்
இந்த வாரம் உங்கள் மனதிற்கு ஒரு புதிய தெளிவையும், ஆன்மீக பலத்தையும் தரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் தவித்த வேலைகளை இந்த வாரம் வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பெரிய ஆதரவும், புதிய தொடர்புகளும் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையை சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தை விஸ்தரிக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேற்றுமை வரலாம். பணப்பற்றாக்குறை சில நேரத்தில் வரலாம்.
ரிஷபம்
இந்த வாரம் உங்களுக்கு லாபங்களையும், சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் தேடித்தரும். கடந்த கால உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்வீர்கள். மூத்த சகோதரர்கள் அல்லது தந்தை வழி உறவுகளுடன் பிணக்குகள் நீங்கி உறவு பலப்படும். தொழில் துறையில் இது ஒரு பொற்காலம். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், புதிய சந்தைகளை ஆராயவும் ஏற்ற நேரம். பொருளாதார நிலை வலுவடையும். பூர்வீகம் சென்று குல தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு நல்ல காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தின் சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் மனச்சிக்கலை தரும்.
மிதுனம்
இந்த வாரம் நீங்கள் புகழின் உச்சிக்குச் செல்வீர்கள். உங்கள் துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டுவீர்கள். எதையும் துல்லியமாகச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசையான பதவி அல்லது அதிகாரத்தையும் அடைய காலம் கனிந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப முன்னேற்றம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியாக இது சுறுசுறுப்பான வாரம். பிறருக்கு வாக்குறுதிகளைத் தர வேண்டாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. தகவல் தொடர்புகளில் மிகுந்த கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
கடகம்
இந்த வாரம் வாழ்க்கைப் பாதை குறித்த தெளிவும், நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவு கிட்டும். புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் பெரியவர்களின் ஆசி உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். கல்வி அல்லது சட்டத் துறையில் இருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும். பெரிய அளவிலான புதிய முதலீடுகளுக்குப் பொறுமை தேவை. வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் ஆதாயம் தரும். காரணம் தெரியாத கவலைகளாக இருக்கும். குழப்பங்களும் அவ்வப்போது ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத வழிகளில் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். கடினமான சூழலையும் உங்கள் கண்ணியமான நடத்தையால் கையாளுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது நிதானம் கடைப்பிடிக்கவும். நண்பர்களுடன் வீண் விவாதம் தவிர்க்கவும். தொழில் செய்பவர்கள் தங்கள் நிர்வாகத்தை நல்ல நேரம். பழைய முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும். உடன்பிறப்புகளோடு நல் உறவுகளை கையாளுங்கள் கருத்து வேறுபாடு வேண்டாம். நெருங்கிய உறவினர்கள் இடையே பரஸ்பர ஒற்றுமை குறையும். மனதில் அவ்வப்பொழுது கவலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
கன்னி
இந்த வாரம் தனித்துச் செயல்படுவதை விட மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர புரிதல் அதிகரித்து பிணைப்பு பலப்படும். தொழில் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பார்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீரும். முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக வாட்டிய தடைகள் விலகும். வைத்திய சிகிச்சைகள் பலிதமாகும். அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புதிய பாதைகள் புலப்படும். சமூகத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் ஒரு வழிகாட்டியாக நீங்கள் திகழ்வீர்கள். குடும்ப உறவுகள் சீராக இருக்கும். தொழிலில் போட்டி இருந்தாலும், உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் உண்டு. சில நேரங்களில் கிடைப்பது போல் இருந்து கைகழுவிப் போகலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் மிளிரும் வாரம். நீண்ட கால இலக்குகளை அடைய எடுக்கும் முடிவுகள் சரியானதாக அமையும். குடும்ப உறவுகளில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அரசியலில் இருப்பவர்கள் புதுமையான கருத்துக்களால் மக்களைக் கவர்வார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலம் கருதி நீங்கள் செய்த ஏற்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் வாக்கை நீங்களே காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும்.
தனுசு
இந்த வாரம் குடும்ப மகிழ்ச்சியைத் தரும் வாரமாக அமையும். நிலம், வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. மனதிற்குள் இருந்த நீண்ட நாள் கவலை மறைந்து நிம்மதி கிடைக்கும். குடும்பம் மற்றும் சமூக உறவுகள் இனிமையாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு கூடும். பொருளாதார நிலையை மேம்படுத்தவும் இது நல்ல காலம். தொழிலில் வளர்ச்சியும் லாபமும் நினைத்தபடி இருக்கும். இரவு நேரத்தில் பயணங்களைத் தவிர்க்கவும். வரவு செலவுகளில் கவனம் இருந்தால் பெரிய அளவில் பணப்பிரச்சனை வராது.
மகரம்
இந்த வாரம் உங்கள் தைரியமே உங்கள் பலமாக இருக்கும். பயணங்கள், தகவல் தொடர்பு மற்றும் துணிச்சலான முடிவுகள் மூலம் காரிய வெற்றி உண்டு. அண்டை வீட்டாருடன் இணக்கமான சூழல் நிலவும். சமூகப் பணிகளில் உங்களின் அனுபவம் சார்ந்த ஆலோசனைகளுக்குப் வரவேற்பு இருக்கும். தொழில் மற்றும் நிதி நிலையில் அதிரடியான மாற்றங்கள் உண்டாகும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். வரவு செலவுகளில் கவனம் இருந்தால் பெரிய அளவில் பணப்பிரச்சனை வராது. சிலருக்கு தவற விடும் வாய்ப்பும், திருட்டு போகும் வாய்ப்பும், பிறரிடம் ஏமாறும் வாய்ப்பும் உண்டு. அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கும்பம்
இந்த வாரம் உங்கள் கவனம் நிதி நிலைமையின் மீது இருக்கும். நிதி ரீதியான சரியான திட்டமிடல் மூலம் உங்கள் இலக்குகளை எட்டுவீர்கள். குடும்பச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும், உங்கள் பேச்சிற்கு வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்கவும், புதிய ஒப்பந்தங்களை உருவாக்கவும் இது நல்ல நேரம். வார இறுதியில் நிதி நிலைமை மேம்படும். பிள்ளைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் வாய்ப்பு உண்டு. பயணங்களின் போது பணம், பொருளை மிகவும் எச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மீனம்
இந்த வாரம் உடல் நலம் மேம்படும். புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நேரம். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் உங்கள் அதிகாரம் மேலோங்கும். தொழில் துறையில் மரியாதையும் அதிகாரமும் தேடி வரும். உயர் பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் எளிதாகச் செயல்படுத்தப்படும். ஆரோக்கியத் தொல்லை அகலும். புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருப்பீர்கள். சிலருக்கு வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவும் அதைவிடக் கூடுதலாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்