வார ராசிபலன் – 18 ஆகஸ்ட் 2025 முதல் 24 ஆகஸ்ட் 2025 வரை

மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3-ம் இடத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. பு

By ·

மேஷம் 

இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3-ம் இடத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி பெறும் பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெறும்.  கொடுக்கல் வாங்கல்கள் சுலபமாகும். அரசாங்க வேலைகளில் அனுகூலம் உண்டு. புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களிடையே பிரச்னைகள் வரலாம். கவனமாகக் கையாள வேண்டும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நிகழலாம்.

ரிஷபம் 

இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு, 2-ல் சுபர்கள், 11-ல் சனி ஆகிய கிரகங்கள் முயற்சிகளில் வெற்றி தருவார்கள். புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிவாகை சூடுவர். பழைய கடன்கள் வசூல் ஆகிவிடும். சொத்துப் பிரச்னைகள் தீரும். பொருளாதாரத்தில் நிறைவு உண்டு. ஏதோ ஒரு விதத்தில் பணம் கைக்கு கிடைத்து விடும். முக்கியமான பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. கலைஞர்களுக்கு ஆதாயம் உண்டு. திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு சாதகமான கிரக நிலைகள் உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்களும் கற்பனையான குழப்பங்களும் மனதில் இருக்கும். பணத்தை எண்ணிப் பார்த்து செலவு செய்ய வேண்டும்.

மிதுனம் 

இந்த வாரம் மிதுனம் ராசியினருக்கு 1, 2-ம் இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்கள் பணிகளை மட்டும் பார்த்து வருவது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையான ப்ராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு பெயர் பெறுவர். ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்க அமைப்புள்ளது. கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. மருத்துவச் செலவுகள் உண்டு. சுப விரயங்களும் உண்டு. உணவுகளில் ஒவ்வாமை ஏற்படும் வெளியில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சகோதரர்களிடம் உறவு விரிசல் ஏற்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். 

கடகம் 

இந்த வாரம் கடகம் ராசியினருக்கு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன ஸ்தான அதிபதி ஆகியோரால் செல்வாக்கு உயரும். பணி வாய்ப்புகள் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கையில் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி வெளியூர் பிரயாணங்களை செய்ய வேண்டி இருக்கும்.‌ தொழில்கள் சிறப்பாக நடைபெறும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். நிலம் வீடு விற்பனையில் ஆதாயம் உண்டு. கஷ்டங்கள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக முதலீடு தேவைப்படும் எந்த விஷயத்தையும் இப்பொழுது கையில் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

சிம்மம் 

இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு கேதுவுடன் இணைந்து ஆட்சி பெற்ற ராசியதிபதி மனதில் ஆன்மிக எண்ணங்களை உருவாக்குவார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டு நெறிகள் கிடைக்கப்பெறும். பொருளாதார முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், லாபம் எல்லாம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பண வரவும் கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் உண்டு. திருமணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். சுபகாரியங்கள் பலிதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை அவ்வப் பொழுது பிரச்னைகள் ஏற்படும். பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். 

கன்னி 

இந்த வாரம் கன்னி ராசியினருக்கு ராஜ்ய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவை பலம் பெறுவதால் காரிய வெற்றி ஏற்படும். தனியார் மற்றும் அரசு உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்பதற்குரிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.‌ தொழிலில் முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்வாய்ப்புக்களும் ஆதாயமும் உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. பொருளாதார ஏற்றம் உண்டு. கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பிற்கு வழி உண்டு. தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவை கிடைக்க வாய்ப்புண்டு. அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். சகோதர உறவுகளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். புதுத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டாம்.

துலாம் 

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுபர்கள் சேர்க்கை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்குகொண்டு உற்சாகம் அடைவர். அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டு. புதிய முயற்சிகள் செய்யலாம். பழைய கடன்கள் வசூலாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். மனதில் பதற்றம் அவ்வப்பொழுது வரும். வாதங்களில் ஈடுபட வேண்டாம். தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வரலாம்.

விருச்சிகம் 

இந்த வாரம் விருச்சிகம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் ராசி அதிபதியும், ராஜ்ய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் அரசாங்க விஷயங்களில் லாபம் உண்டு. தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று சிறப்பாக செயல்படுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்வார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் அமைப்புண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் பலனளிக்கும். விருந்து முதலிய கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் பகை, வழக்குகள் முதலிய விஷயங்களை சாதகமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். தந்தையாரோடு இணக்கமான உறவுகள் இருக்காது. தந்தை வழியில் கசப்புக்கள் வரும். கடன் கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னைகள் வரலாம்.

தனுசு 

இந்த வாரம் தனுசு ராசியினருக்கு 7, 8-ம் இடங்களில் சுபர் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். ‌அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணியிடமாற்றம் அல்லது உத்தியோக உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை கால விளையாட்டு போட்டிகளில் வெற்றி அடைவர். தொழில் முயற்சிகள் பலனளிக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் புது வீடு கட்டிக் கொண்டு செல்லும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரச் சிக்கல் தீரும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பிறர் பிரச்னையில் தலையிட வேண்டாம். குறிப்பாக பெண்களால் பிரச்னை வரலாம். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகள் மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். 

மகரம் 

இந்த வாரம் மகரம் ராசியினருக்கு 8-ம் இடத்திலுள்ள ஆட்சி பெற்ற சூரியன் உடல் நலனில் முன்னேற்றத்தை தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை ஏற்று செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களில் தங்களுடைய தனித்திறன்களை காட்டி வெற்றி பெறுவர். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. சிலர் புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு மற்றும் ஏற்கனவே வசதி குறைந்த வீட்டிலிருந்து நல்ல வீட்டிற்கு மாறும் யோகம் உண்டு. இழுபறியான காரியங்கள் சீக்கிரம் முடியும். தொழிலில் மந்த நிலை மாறும். பயணங்கள் பலனளிக்கும். பயணம் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம் 

இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு 7-ல் அமர்ந்த ஆட்சி பெற்ற சூரியன் அரசு தரப்பு நன்மைகளை தருவார். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு இனிமையான பணியிடச்சூழல் அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்படுவர். சிறு மாற்றங்களை செய்து வணிகத்தில் வெற்றி காண்பீர்கள். விரயங்கள் குறையும். பிரச்னைகளின் வீரியம் குறையும். கவனத்தோடு இருந்தால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். கலைத்துறை சிறப்பாக இருக்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். அவசரம் வேண்டாம். தொழிலில் புதிய முதலீடுகள் புதிய முயற்சிகள் இப்பொழுது செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. 

மீனம்

இந்த வாரம் மீனம் ராசியினருக்கு 5-ம் இடத்திலுள்ள புதன் சந்தர்ப்பத்திற்கேற்ப செயல்படும் திறனை கொடுத்து காரிய வெற்றி தருவார். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு புதிய பணியிட மாற்றத்திற்கான தகவல் வந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுவது வெற்றி தரும். தாய் வழி உறவுகள் ஆதரிக்கும். சகோதர உதவிகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதோ விற்பதோ எளிதாக இருக்கும். லாபமும் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிரமங்கள் குறையும். அலட்சியம் செய்தவர்கள் உங்களைத் தேடி வந்து உதவுவார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இதனையும் படியுங்கள் :2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை