வார ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2025 முதல் 16 ஆகஸ்ட் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு, ஒன்பதாமிடம் சுப கிரக பார்வைகள் பெறுவதால் மதிப்பு மரியாதை பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எ
மேஷம்
இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு, ஒன்பதாமிடம் சுப கிரக பார்வைகள் பெறுவதால் மதிப்பு மரியாதை பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளும் திறனை பிறக்கும். தொழில் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் அதிகரிக்கும். போட்டிகள் குறையும். கலைஞர்களுக்கு ஆதாயம் உண்டு. ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். சகோதர உறவுகள் கருத்து வேறுபாடுகளைத் தரலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு, 2-ம் இடத்தில் சுபர்கள் இருப்பது செல்வாக்கும், சொல்வாக்கும் பெறச் செய்யும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவர். பொருளாதாரப் பற்றாக்குறையை நீக்கும். கடன்களை அடைத்து விடும் வலிமையைத் தரும். அரசாங்க காரியங்கள், ஒப்பந்தங்கள் முதலியவை சாதகமாகவே இருக்கும். வாகனத்தில் அவ்வப்போது பிரச்னைகள் வரும். பிரயாணங்களில் தடைகள் ஏற்படும். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் உண்டு. ஒரு சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
மிதுனம்
இந்த வாரம் மிதுனம் ராசியினருக்கு 7-ம் இடத்தில் சுப கிரக பார்வைங்கள் ஏற்படுவதால் திட்டமிட்ட விஷயங்களை செய்து முடிப்பார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்கள் பணிகளை மட்டும் பார்த்து வருவது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையான ப்ராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு பெயர் பெறுவர். முக்கியமான பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. சிலர் வாகனங்களை மாற்றுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி உறவுகள் கருத்து வேற்றுமை இன்றி சாதகமாக இருக்கும். வீடு வாங்குதல் கட்டுதல் முதலிய செயல்கள் தாமதமின்றி நடைபெறும். சகோதர உறவுகளில் உரசல்கள் ஏற்படலாம். உறவினர்களிடமும் உரசல்கள் வேண்டாம்.
கடகம்
இந்த வாரம் கடகம் ராசியினருக்கு 6-ம் இடம் சுப கிரக பார்வை பெறுவதால் பழைய கடன்கள் அடையும். பணி வாய்ப்புகள் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கையில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நிலம் வீடு விற்பனையில் ஆதாயம் உண்டு. சகோதர உறவுகள் கை கொடுக்கும். உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ளவும். மருத்துவச் செலவுகள் உண்டு. சுப விரயங்கள் உண்டு. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு 5-ம் இடம் விசேஷ பலம் பெறுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டு நெறிகள் கிடைக்கப்பெறும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். பொருளாதாரப் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பில்லை. கடன்கள் அடைபடும். பிள்ளைகள் விஷயத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. தொழில் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். சுபகாரியங்கள் பலிதமாகும். பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொள்ளவும். நீங்களாக பிறர் விஷயத்தில் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டாம். குடும்ப விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிக்கவும்.
கன்னி
இந்த வாரம் கன்னி ராசியினருக்கு 4-ம் இடம் சுப பலம் பெறுவதால் வண்டி வாகனங்கள், பூமி லாபம் ஆகியவை உண்டு. தனியார் மற்றும் அரசு உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்பதற்குரிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொழிலில் முன்னேற்றம் உண்டு. வணிகத்தில் லாபம் கிடைக்கும். புதிய தொழிலை ஆரம்பிக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்க உதவிகள் ஒப்பந்தங்கள் சாதகமாகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர உறவு முறைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும்.
துலாம்
இந்த வாரம் துலாம் ராசியினருக்கு 3-ம் இடம் சுப பலம் பெறுவதால் பல்வேறு காரிய வெற்றிகள் உண்டு. அரசு உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்குகொண்டு உற்சாகம் அடைவர். குடும்பத்தில் அமைதி, தொழிலில் முன்னேற்றம், பொருளாதார ஏற்றம் முதலியவை நிச்சயமாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். எந்தக் காரியத்திலும் அவசரப்படும் குணம் அதிகரிக்கும். அதனால் காரியங்கள் தவறாக முடியும். சகோதர உறவுகளோடு உரசல்கள் வேண்டாம்.
விருச்சிகம்
இந்த வாரம் விருச்சிகம் ராசியினருக்கு 2-ம் இடம் சுப பலம் பெறுவதால் தடைபெற்ற திருமணங்கள் நடைபெறும். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று சிறப்பாக செயல்படுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்வார்கள். வழக்கு விஷயங்களை சாதகமாக எதிர்கொள்வீர்கள். பணம் கைக்குக் கிடைத்து செலவுகளுக்கு கஷ்டப்படாமல் வந்து விடும். நிலம் வீடு முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும். வீட்டில் அவ்வப் பொழுது சிறு சிறு பிரச்னைகள் எழுந்து அமைதி கெடும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. பிரயாணங்களை குறைத்து கொள்ளுங்கள்.
தனுசு
இந்த வாரம் தனுசு ராசியினருக்கு சுப கிரக பார்வைகள் மூலம் வெளியிட தொடர்புகள் கிடைத்து குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணியிடமாற்றம் அல்லது உத்தியோக உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை கால விளையாட்டு போட்டிகளில் வெற்றி அடைவர். தகவல் தொடர்பு வெற்றிகரமாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களுக்குக் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கும். ஒரு சிலருக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும் அதன் மூலமாக முக்கியமான திருப்புமுனை ஏற்படலாம். பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. தந்தையாரோடு இணக்கமான உறவுகள் இருக்காது. தந்தை வழியில் கசப்புக்கள் வரும்.
மகரம்
இந்த வாரம் மகரம் ராசியினருக்கு 12-ம் இடம் சுப கிரக பார்வை பெறுவதால் புதிய வீடு மாற்றம், புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை ஏற்று செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களில் தங்களுடைய தனித்திறன்களை காட்டி வெற்றி பெறுவர். எதையும் நிதானமாக எதிர்கொண்டால் பிரச்னைகளைச் சமாளித்து விடலாம். சிறிய அளவில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டாலும் சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, பயணம் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வேண்டாம். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கும்பம்
இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு 11-ம் இடம் பலம் பெறுவதால் எதிர்பாராத நன்மைகள் வீட்டு கதவை தட்டும். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு இனிமையான பணியிடச்சூழல் அமையும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்படுவர். அரசாங்க உதவிகளும் அனுகூலங்களும் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். கலைத்துறை சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. குடும்பப் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். சகோதர உறவுகளில் கவனம் தேவை. தலைவலி முதலிய உடல் உபாதைகள் நேரலாம். சிறு விபத்துகளுக்கு வாய்ப்புண்டு என்பதால் கவனத்தோடு இருக்கவும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
மீனம்
இந்த வாரம் மீனம் ராசியினருக்கு 10-ம் இடம் பலமாக இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு புதிய பணியிட மாற்றத்திற்கான தகவல் வந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுவது வெற்றி தரும். திருமண முயற்சிகள் பலிதமாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் கருத்து வேறுபாடுகள் கட்டுக்குள் இருக்கும். கவனத்தோடு செலவு செய்வது தான் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளும் வழியாகும். அவசரப்பட்டு யார் விஷயத்திலும் தலையிட வேண்டாம். பழைய கடன்கள் தொல்லை தரக்கூடும் என்பதால், எச்சரிக்கை அவசியம்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சில ராசிகள்!!