வீட்டிலயே ஸ்வீட் செய்ய நினைத்தால் சுலபமாக அவகேடோ பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வாயில் வைத்தவுடன் கரையும்!

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்

By Prem Kumar · 17/4/2024

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தப் பழங்களை வைத்து சுவையான பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் அல்லது பர்பி போன்று செய்து சாப்பிடலாம். இந்த பழத்தைப் பிடிக்காதவர்களுக்கு பர்பியாக செய்யும் போது மறுக்காமல் சாப்பிடுவார்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த பழத்தில் சர்க்கரையே கிடையாது. அதனால் நம்முயை தினசரி டயட்டில் இந்த அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்களை அடைய முடியும். உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற அவகேடோ பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த அவகேடோ பர்பி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள் : வீட்ல அவல்  இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Recipes AMP · Quick view
View full