Home ஸ்வீட்ஸ் வீட்டிலயே ஸ்வீட் செய்ய நினைத்தால் சுலபமாக அவகேடோ பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வாயில்...

வீட்டிலயே ஸ்வீட் செய்ய நினைத்தால் சுலபமாக அவகேடோ பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வாயில் வைத்தவுடன் கரையும்!

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தப் பழங்களை வைத்து சுவையான பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் அல்லது பர்பி போன்று செய்து சாப்பிடலாம். இந்த பழத்தைப் பிடிக்காதவர்களுக்கு பர்பியாக செய்யும் போது மறுக்காமல் சாப்பிடுவார்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

-விளம்பரம்-

குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த பழத்தில் சர்க்கரையே கிடையாது. அதனால் நம்முயை தினசரி டயட்டில் இந்த அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்களை அடைய முடியும். உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற அவகேடோ பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த அவகேடோ பர்பி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம்.

Print
No ratings yet

அவகேடோ பர்பி | Avocado Burfi Recipe In Tamil

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தப் பழங்களை வைத்து சுவையான பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் அல்லது பர்பி போன்று செய்து சாப்பிடலாம். இந்த பழத்தைப் பிடிக்காதவர்களுக்கு பர்பியாக செய்யும் போது மறுக்காமல் சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Avocado Burfi
Yield: 4 People
Calories: 160kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 அவகேடோ
  • 4 பிரெட்
  • 1/4 கப் டேசிகேடட் கோகோநட்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் நறுக்கிய பாதாம், பிஸ்தா
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அவகேடோவை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு‌ மிக்ஸி ஜாரில் பிரெட் துண்டுகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் அவகேடோ விழுதை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு டெசிகெடட் கோகனட் சேர்த்து கலந்து விடவும்.
  • பின் பால் ஊற்றி கலந்து விடவும் அதன்பிறகு சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இவை கடாயில் நன்கு ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி விடவும்.
  • பின் இதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி தேவையான வடிவில் கட் செய்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான அவகேடோ பர்பி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 160kcal | Carbohydrates: 8.5g | Protein: 7.2g | Fat: 4.7g | Sodium: 12mg | Potassium: 250mg | Fiber: 6.7g | Sugar: 5.2g | Vitamin A: 6IU | Vitamin C: 33mg | Calcium: 6mg | Iron: 2mg

இதையும் படியுங்கள் : வீட்ல அவல்  இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!