நம்ம கடலை பர்பி தேங்காய் பர்பி அப்படின்னு நிறைய கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த அவல் பர்பிய கண்டிப்பா நம்ம சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா இந்த அவல் பர்பி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். இதுக்கு நீங்க வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் இல்லனா கருப்பட்டி சேர்த்து செய்வதாக இருந்தாலும் செய்யலாம் ரெண்டுமே டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஆனா கருப்பட்டி வச்சு செஞ்சா இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாவே இருக்கும்.
நம்ம வீட்ல அவல் இருந்தா அத ஊற வச்சு அதுல சக்கரையும் தேங்காய் பூவும் போட்டு ஒரு சிலர் சாப்பிடுவாங்க ஆனா ஒரு சில குழந்தைகளுக்கு அப்படி சாப்பிடுவது பிடிக்காது அப்ப அவங்களுக்கு இந்த சத்தான சிவப்பு அவல் வச்சு சூப்பரா அவல் பர்பி செஞ்சு குடுங்க வீட்டிலேயே செய்றதால அது ஆரோக்கியமாகவும் இருக்கும் கருப்பட்டி வச்சு செய்றதால இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் குறிப்பா பெண் குழந்தைகளுக்கு கருப்பட்டி நம்ம குடுக்குறது ரொம்பவே நல்லது.
அதுமட்டுமில்லாமல் கடைகளில் போய் குழந்தைங்க ஆரோக்கியம் இல்லாத சில ஸ்நாக்ஸ வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்லயே இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைங்க வெளியில் கடைக்கு போய் ஏதாவது வாங்கி சாப்பிடணும் அப்படின்னு நினைக்கவே மாட்டாங்க. எப்பவுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் நம்ம வீட்டிலேயே செஞ்சு கொடுத்தா ரொம்ப நல்லது. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான டேஸ்டான அட்டகாசமான அவள் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
அவல் பர்பி | Aval Burfi Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் அவல்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/2 கப் கருப்பட்டி
- 4 ஏலக்காய்
- 5 முந்திரி
- 5 பாதாம் பருப்பு
- 5 பிஸ்தா
- 1 டீஸ்பூன் நெய்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் அவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸிஜாரில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்
- பிறகு அதே கடாயில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுத்து அதனை மாற வைத்து அவல்பொடியுடன் சேர்த்து அதையும் அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அடி கனமான கடாயில் தண்ணீர் சேர்த்து கருப்பட்டியும் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி மறுபடியும் அதே கடாயில் சேர்த்துக் கொள்ளவும்
- அதனுடன் அரைத்து வைத்துள்ள அவல் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
- பிறகு அதில் ஏலக்காய் சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை 15 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து கடாயில் அந்த கலவை ஒட்டாமல் வரும் பொழுது அதனை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்
- அதன் மேல் முந்திரி பாதாம், பிஸ்தா அனைத்தையும் பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதனை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான அவல் பர்பி தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ரோஸ் மில்க் பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!