வாயில் வைத்தவுடன் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ரோஸ் மில்க் பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த பர்பியை செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் மைதா இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரோஸ் மில்க் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

வெயில் காலம் வந்துவிட்டாலே ரோஸ் மில்க் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால், கொளுத்தும் வெயிலுக்கு சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என ரோஸ் மில்க் வாங்கி நம்மில் பலர் குடித்திருப்போம். ஆனால் ரோஸ் மில்க்கில் வித்தியாசமாக‌ ஏதேனும் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? அப்படிப்பட்ட ரோஸ் மில்க் பிரியர்களுக்கு தான் இந்த தொகுப்பு. உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற ரோஸ் மில்க் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த ரோஸ் மில்க் பர்பி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

ரோஸ் மில்க் பர்பி | Rose Milk Burfi Recipe In Tamil

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த பர்பியை செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் மைதா இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரோஸ் மில்க் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Rose Milk Burfi
Yield: 4 People
Calories: 93kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 பெரிய தட்டு
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • 1/4 கப் நறுக்கிய பாதாம், முந்திரி
  • 1/4 கப் நெய்
  • 1 டீஸ்பூன் ரோஸ் மில்க் எசன்ஸ்
  • 1 கப் பால்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • முதலில் மைதா மாவை‌ சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் மைதா மாவை சேர்த்து மணம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வந்ததும், அதில் நாம் வறுத்து வைத்துள்ள மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  • பின் பால், ஏலக்காய் தூள், ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து நன்கு கைவிடாமல் கட்டிகள் இல்லாமல் கலந்து கொண்டே இருக்கவும். இந்த கலவை நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு பெரிய தட்டில் நெய் தடவி பர்பி கலவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும். பின் அதன் மேல் நறுக்கிய பாதாம் முந்திரி தூவவும்.
  • இதனை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்‌. அரை மணிநேரம் கழித்து பர்பி மாதிரி வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரோஸ் மில்க் பர்பி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 93kcal | Carbohydrates: 2.8g | Protein: 6g | Fat: 1.5g | Sodium: 4mg | Potassium: 123mg | Sugar: 1.6g | Vitamin A: 22.3IU | Vitamin C: 17mg | Calcium: 29mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏத்த மாதிரி ஒரு சூப்பரான வித்தியாசமான பொட்டுக்கடலை மில்க் ஷேக் செய்யலாம்!