பொட்டுக்கடலையில பொட்டுக்கடலை உருண்டையும் பொட்டுக்கடலை சட்னியும் தான் சாப்பிட்டிருக்கும் இது என்ன புதுசா பொட்டுக்கடலை மில்க் ஷேக் அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஆமாங்க இந்த பொட்டுக்கடலை மில்க் ஷேக் இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு டிஃபரண்டான மில்க் ஷேக் தான். நம்மளும் பனானா மில்க் ஷேக் மாதுளை மில்க் ஷேக் மாம்பழம் மில்க் ஷேக் அப்படின்னு டிஃபரண்டா நிறைய மில்க் ஷேக் கொடுத்திருப்போம் ஆனால் ஒரு தடவை உங்க வீட்டுல இருக்குற பொட்டுக்கடலையை வச்சு இந்த மில்க் ஷேக் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இத அடிக்கடி செய்வீங்க.
உங்க குழந்தைகள் ஏதாவது மில்க் ஷேக் கேட்டாங்கன்னா உங்க வீட்ல எந்த பழங்களும் இல்லனா டக்குனு பொட்டுக்கடலையை வச்சு இந்த மில்க் ஷேக் செஞ்சு கொடுத்துடுங்க. கண்டிப்பா இந்த வெயிலுக்கு ஏத்த மாதிரி நல்லா ஜில்லுன்னு மில்க் ஷேக் குடிக்கிறதுக்கு அவ்வளவு ஒரு டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த மில்க் ஷேக் குடிச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இத அடிக்கடி செய்வீங்க.
வெறும் நாளை பொருள் வைத்து செய்யக்கூடிய இந்த மில்க் ஷேக் ரொம்பவே ரிச்சான டேஸ்ட்ல இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டாங்கனா கவலையே படாதீங்க இந்த பொட்டுக்கடலை மில்க் ஷேக் மட்டும் போட்டு குடுங்க கண்டிப்பா உங்களை பாராட்டிட்டு போவாங்க. இப்ப வாங்க இந்த வெயிலுக்கு ஏத்த ஜில்லுனு இருக்கக்கூடிய பொட்டுக்கடலை மில்க் ஷேக் சூப்பரான டேஸ்ட்ல சட்டுனு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பொட்டுக்கடலை மில்க் ஷேக் | Pottu Kadalai Milk Shake
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் பொட்டுக்கடலை
- 1 கப் பால்
- 6 பேரிச்சம்பழம்
- 1 டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
- 1 வாழைப்பழம்
- 1 ஏலக்காய்
- 5 பாதாம்
செய்முறை
- முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்
- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதையும் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை பவுடருடன் ஆறிய பாலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனுடன் பேரிச்சம் பழம் வாழைப்பழம் ஏலக்காய் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனை பிரிட்ஜுக்குள் அரை மணி நேரம் வயிற்று எடுத்தால் ஜில்லென்ற பொட்டுக்கடலை மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மாதுளம் பழ வைத்து தான் இந்த பொரியல் செய்தேன் என்று சொன்னா ஆச்சர்யபடும் அளவிற்கு இப்படி செய்து பாருங்க!