மாதுளம் பழம் அப்படி என்றால் நமக்கு ஜூஸ் மட்டும்தான் நம்ம எப்பவுமேநியாபகம் வரும். மாதுளம் பழத்துல ஜூஸ், மில்க் ஷேக்கும் இந்த மாதிரி தான் சாப்பிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு மாதுளம் பழத்தை வைத்து ஒரு பொரியல் அதுவும் சாப்பாட்டுக்கு தொட்டுக்கிற மாதிரியா அப்படி நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது. ஆமாங்க இந்த மாதுளம் பழத்தை வைத்து சூப்பரான ஒரு பொரியல் பண்ண போறோம். அது சாப்பாட்டோட சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும். மாதுளம் பழம் அப்படிங்கறது ஒரு துவர்ப்பு சுவையும் இனிப்பு சுவை, புளிப்பு சுவைன்னு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு சுவையுடைய பழம. அந்த பழத்தில் பொரியல் செஞ்சா எப்படி இருக்கும் அதுவும் காரமா மிளகாய் எல்லாம் போட்டு செய்யும் போது எவ்ளோ டேஸ்டா இருக்கும். அந்த மாதிரி ஒரு வித்தியாசமான பொரியல் தான் இந்த மாதுளம் பழ பொரியல்.
மாதுளம் பழத்தை சாப்பிட நமக்கு கஷ்டமா இருக்கும். அதுவும் மாதுளம் பழம் மொத்த உரிச்சி சாப்பிடணும் அப்படிங்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும். மாதுளம் பழத்தை உரிச்சு கொடுக்கிறதுல தான் நம்ம மேல அவங்களுக்கு எவ்ளோ அன்பு இருக்குனு தெரியுமா புதுசா இப்படி ஒரு ட்ரெண்ட வேற கொண்டு வந்துட்டு இருக்காங்க. அப்படி இந்த மாதுளம் பழத்தை வைத்து சூப்பரா ஒரு பொரியல் நம்ம கொஞ்சம் காரமா பச்சை மிளகா எல்லாம் போட்டு பண்ணி கொடுக்கும் போது எவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. அப்போ உங்களுக்கு எவ்ளோ அன்பா அவங்க மேல இருக்குன்னு யோசிப்பாங்க. அந்த மாதிரி சுவையான ரொம்பவே ருசியான மாதுளம் பழம் முத்துக்களை வைத்து சூப்பரான ஒரு பொரியல் பண்ணப்போறோம்.
இந்த பொரியல் எல்லாருக்கும் நிச்சயமா பிடிக்கும். அதுவும் வித்தியாசமா இருக்கிற உணவுகளை ஒரு தடவையாவது முயற்சி பண்ணி சாப்பிட்டு பாக்கணும் அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கும். அந்த மாதிரி உங்களுக்கு வித்தியாசமான உணவுகள் செய்து உங்க வீட்டுக்கு கொடுக்கனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க கண்டிப்பா இந்த மாதுளம் பழம் பொரியல ட்ரை பண்ணி பார்க்கலாம். ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும் அது மட்டும் இல்லாம மாதுளம் பழத்துல செய்றதுனால இது ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவும் கூட. சரி வாங்க இந்த மாதுளம் பழம் பொரியல் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.
மாதுளம் பழ பொரியல் | Pomegranate poriyal recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் மாதுளை பழம்
- 3 பச்சை மிளகாய்
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மாதுளம் பழத்தை உரித்து முத்துக்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- மாதுளம் பழம் முத்துக்களை நன்றாக கலந்து விட்ட பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறினால் சுவையான மாதுளம் பழ பொரியல் தயார்.