- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்பு சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
பலாப்பழம் பெரிதாக வளர்வதற்கு முன்பாக பிஞ்சாக இருக்கும்போதே அதை துண்டுகளாக்கி பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் பலாக்காயை நாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான வெப்ப மண்டலப் பகுதிகளி்ல் பலா அதிகமாக விளையும். இந்த பலா பிஞ்சைப் பறித்து அதை தோல் சீவி, மற்ற காய்கறிகளைச் சமைப்பது போல கூட்டு செய்து சாப்பிடுவார்கள்.
லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ்,கேரட், முருங்கை,கோஸ், பட்டாணி என்று அதே காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இன்று நாம் பலா காய் வைத்து வறுவல் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகளுக்கு வைத்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை பலாக்காய் கிடைத்தால் மிஸ் பண்ணாம ருசியான மிளகு வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் பலா பிஞ்சை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள பலா காய், பச்சை பட்டாணி சேர்த்து கலந்து விடவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் தண்ணீர் சிறிது சுண்டியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
பலா காய் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பலா காய் பட்டாணி வறுவல் தயார்.






