Home சைவம் அடுத்தமுறை பலாக்காய் கிடைத்தால் மிஸ் பண்ணாம ருசியான மிளகு வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி...

அடுத்தமுறை பலாக்காய் கிடைத்தால் மிஸ் பண்ணாம ருசியான மிளகு வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

இதுவரை எத்தனையோ வறுவல் ரெசிபிகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் வறுவல் செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து வறுவல் செய்யலாம். இந்த பலாக்காய் மிளகு வறுவல் அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்பு சுவையுடைய பழங்களில் ஒன்று. ஆனால் பலாக்காயை நாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ‌ஆனால் இந்த பழம் பெரிதாகக் காய்ப்பதற்கு முன் சிறிய பிஞ்சாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடும் பழக்கம் நம் தமிழர்களிடையே உண்டு.

-விளம்பரம்-

லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இவற்றில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பலாக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை உணவில் சேர்த்து பார்வை கோளாறை தவிர்க்கலாம். பலாக்காய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி ஆகிறது. வலிமையை ஏற்படுத்துகிறது. தாது விருத்தியடைகிறது. இதனைச் சாப்பிடும் சிலருக்கு ருசியை மந்தப்படுத்தும். ஆகையினால் இதில் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும். எனவே இந்த கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படுவதோடு, புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது இந்த பலாக்காயை வைத்து எப்படி மிளகு வறுவல் செய்வதென்று பார்க்கலாம். இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. இந்த பலாக்காய் மிளகு வறுவல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Print
5 from 1 vote

பலாக்காய் மிளகு வறுவல் | Raw Jackfruit Pepper Fry‌ Recipe In Tamil

இதுவரை எத்தனையோ வறுவல் ரெசிபிகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் வறுவல் செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து வறுவல் செய்யலாம். இந்த பலாக்காய் மிளகு வறுவல் அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். இந்த பழம் பெரிதாகக் காய்ப்பதற்கு முன் சிறிய பிஞ்சாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடும் பழக்கம் நம் தமிழர்களிடையே உண்டு. லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த பலாக்காயை வைத்து எப்படி மிளகு வறுவல் செய்வதென்று பார்க்கலாம். இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. இந்த பலாக்காய் மிளகு வறுவல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, tamil nadu
Keyword: Raw Jackfruit Pepper Fry‌
Yield: 4 People
Calories: 157kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 பலா பிஞ்சு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 பட்டை, கிராம்பு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பலாக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ குக்கரில் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வர மிளகாய், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.‌ வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த பலா துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின் மிளகுத்தூள், மல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான பலாக்காய் மிளகு வறுவல் தயார். இந்த பலாக்காய் மிளகு வறுவல் சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 157kcal | Carbohydrates: 8.3g | Protein: 8.2g | Fat: 1.1g | Sodium: 3.3mg | Potassium: 407mg | Fiber: 2.3g | Sugar: 3.5g | Vitamin A: 54IU | Vitamin C: 12mg | Calcium: 22mg | Iron: 1.5mg

இதனையும் படியுங்கள் : ருசியான பலாக்காய் கோலா உருண்டை இப்படி செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!