பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம். மேலும் இந்த ரெசிபியானது குழந்தைகள் மதிய வேளையில் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும். அதாவது நூடுல்ஸ் என்றால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் பாக்கெட் நூடுல்ஸ் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. எனவே கோதுமை மாவில் செய்யும் இந்த சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் அதில் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இதனை செய்வதற்க்கு மிகவும் ஈஸியாகவும், குறைந்த நேரமும் தான் செலவாகும்.
என்றாவது ஒருநாள் பாக்கெட்டுகளில் விற்கப்படும் நூடுல்ஸை சமைத்துக் கொடுக்கலாம். ஆனால் அடிக்கடி இதனை செய்து கொடுத்து, குழந்தைகளை பழக்கி விட கூடாது. அது அவர்கள் உடல் நலத்திற்கு நன்மை கிடையாது. அவ்வாறு ஆரோக்கியமான உணவுகளான சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளை வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. அப்படி சப்பாத்தி செய்யும் பொழுது அது ஒரு சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக இருந்தால், மீதியாகிவிடும். இந்த மீந்துபோன சப்பாத்தியில் இப்படி சுவையான உணவை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும், அவர்களுக்குப் பிடித்த உணவாகவும் இருக்கும். வாருங்கள் இந்த சப்பாத்தி நூடுல்ஸை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சப்பாத்தி நூடுல்ஸ் | Chappathi Noodles Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 வெங்காயம்
- 1 டீஸ்பூன் சோயாசாஸ்
- 1 டேபிள் ஸ்பூன் சில்லிசாஸ்
- 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
- உப்பு தேவையானஅளவு
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பின்பு மீதமான சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- அடுப்பில்கடாயை சாய்த்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்
- பின்பு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
- பிறகு அதனுடன் வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸயும் சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி மூடி வைத்து, இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- இப்போது சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.
Nutrition
இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான முள்ளங்கி வெஜிடபிள் பிங்கர்ஸ் இப்படி செய்து பாருங்க!!