Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கையில் பல நபர்கள் கயிறு கட்டுவார்கள். அதிலும் கருப்பு கயிறு, சிவப்பு கயிறு, பச்சை கயிறு என கட்டுவார்கள். ஆண்கள், பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கயிறும் கட்டுவார்கள். அதைத் தவிர சிலர் தங்களிடம் தீய சக்திகள் அண்டக்கூடாது, வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு அந்த கயிற்றை கட்டிக் கொள்வார்கள். அப்படி நாம் கட்டிக் கொள்ளும் கயிறு எத்தை நாட்கள் கையில் கட்டியிருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

-விளம்பரம்-

கையில் கயிறு கட்டுவது ஏன்?

கைகளில் கயிறு கட்டுவது நம் வாழ்க்கையில் நமக்கு வரும் தீமையில் இருந்து விலக உதவுகிறது என்று நம்ப படுகிறது. உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு அல்லது சிகப்பு நிறக் கயிறுகளை மந்திரித்துக் கையில் கட்டுகின்றனர். சில கோயில்களில் இதைப் பிரசாதமாகவும் கொடுக்கின்றனர். இதனால் தான் கோயில்களில் சென்று பச்சை மஞ்சள் சிவப்பு கருப்பு கயிறுகளை மக்கள் கைகளில் கட்டி கொள்கின்றனர்.

எந்த நாளில் கயிறு கட்டலாம்?

புதிதாக கருப்பு கயிறு கட்டிக் கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கட்டிக் கொள்வது நல்லது. பூஜை அறையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்து கட்டி கொள்ளலாம். அல்லது சனிக்கிழமையில் கருப்பு கயிறு அணிவது நல்லது. சனிக்கிழமை சனிக்கு உரியது, அவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்பதால் அந்த நாளில் கயிறு கட்டிக் கொள்ளலாம்.

கயிறு கட்டும் முறை

இடுப்பில் மற்றும் கழுத்தில் அணியும் கயிறு ஒன்பது முடிச்சுகளையும், கால் மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் கயிற்றில் மூன்று முடிச்சுகளும் போட்டு கட்ட வேண்டும்.‌ ஒவ்வொரு முடிச்சை போடும் பொழுதும் ‘ஓம் நமச்சிவாய’ என்கிற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு முடிச்சு போட வேண்டும். அதன் பிறகு அதனை எங்கு கட்டிக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தில் கட்டிக் கொள்ளலாம்.

எந்த கையில் கயிறு கட்டுவது நல்லது?

கயிறு கட்டும் முறை காலம்காலமாக மக்களிடையே இருந்து வருகிறது. அனால் கயிறு கட்டும்போது அது கையில் அல்லது காலில் இருந்தாலும் சரி பெண்கள் இடது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். அதுபோல ஆண்கள் வலது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். மாற்றி கட்டுதல் கூடாது.

-விளம்பரம்-

எத்தனை நாட்களில் கயிரை மாற்ற வேண்டும்?

சிலர் கோவிலில் கொடுக்கப்படும் கயிறை அல்லது மந்திரிக்கப்பட்ட கயிறை நிறம் மாறி அதுவே அறுந்து விழும் அளவிற்கு கட்டி இருப்பார்கள். ஆனால் அது தவறு, கைகளில் பாதுகாப்பிற்காகவே அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ கட்டியிருக்கும் கயிறை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம். அப்போது மாத்திரமே அதன் பயனை முழுமையாக பொற முடியும். கையில் கட்டியிருக்கும் கயிறு 21 நாட்களுக்கு முன்னரே தானாக அவிழ்ந்து விட்டால் மீண்டும் அதே கயிறை கட்ட கூடாது.

இதனையும் படியுங்கள் : நம்ம ஊர் காவல் தெய்வம் முனீஸ்வரர் மகத்துவம் தெரியுமா ? அவரின் எலுமிச்ச பழத்தின் சக்தி மகிமை பற்றி தெரியுமா ?