நம்ம ஊர் காவல் தெய்வம் முனீஸ்வரர் மகத்துவம் தெரியுமா ? அவரின் எலுமிச்ச பழத்தின் சக்தி மகிமை பற்றி தெரியுமா ?

- Advertisement -

நமது இந்து புராணத்தின் படி நாம் தினசரி வழிபடும் பல சக்தி வாய்ந்த கடவுள்கள் இருந்தாலும். நமது ஊரில் நமது சொந்த கிராமத்தில் வழிபடக்கூடிய காவல் தெய்வங்கள் வழபடும் அளவிற்கு வராது. அப்படி நம் வழி விடக்கூடிய காவல் தெய்வங்களில் முக்கியமான ஒரு தெய்வம் தான் முனீஸ்வரர். இந்த முனீஸ்வரருக்கு இன்றளவும் நமது கிராம புறங்களில் அதிக அளவு கோவில்கள் இருக்கின்றன. அதற்கு ஏற்றார் போல் பலருக்கு முனீஸ்வரர் குலதெய்வமாக இருக்கிறார் அதனால் இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் முனீஸ்வரரை எப்படி வணங்குவதால் நமக்கு என்ன பலன் ? முனீஸ்வரரின் எலுமிச்சம் பழத்தின் மகத்துவம் என்னவென்று இந்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஈஸ்வரர் பட்டம்

ஏன் நம்ம ஊர் காவல் தெய்வங்களிலேயே முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக விளங்குகிறார் என்று தெரியுமா ? ஏனென்றால் ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்றவர்கள் வெறும் மூன்றே மூன்று தெய்வங்கள் தான். ஆம், ஆது விக்னேஸ்வரர், சனீஸ்வரர், முனீஸ்வரர் இவர்கள் தான். மேலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு முனீஸ்வரர் அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்குவதால் இவரை சப்தமுனி, பஞ்ச முனி என்றும் சில பட்ட பெயர்களை வைத்து கூப்பிடுவோம்.

- Advertisement -

முனீஸ்வரர் மந்திரத்த கயறு, தாயத்து

நீங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது இது போன்ற நிகழ்வுகளை நிறைய முறை பார்த்திருக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளிலிருந்து பெரியோர்கள் வரை யாருக்கு முன்பெல்லாம் உடல் நலம் சரியில்லை என்றாலும் எதையாவது பார்த்து பயந்த கோளாறு இருந்தாலும் நம்ம ஊர் காவல் தெய்வங்கள் கோவிலுக்கு சென்று மந்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் முனீஸ்வரர் கோவிலில் மந்திருச்சு கயிறு தாயத்து போன்றவைகளை கட்டும் பழக்கம் வைத்திருந்தார்கள். ஏன் இன்றளவும் கூட பல கிராமத்தில் இது நடைமுறையில் உள்ளது அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தெய்வம் தான் முனீஸ்வரர்.

மந்திரிந்த விபூதி

இது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள், செய்வினை கோளாறுகள் போன்ற விஷயங்கள் இருப்பது போன்று தோன்றினால் முனீஸ்வரர் கோவில் சென்று அங்கு மந்திரித்து தரும் விபூதியை உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்த விபூதியை அந்த தண்ணீரில் கரைத்து அதனுடன் சிறிது மல்லிகை பூவையும் கலந்து உங்கள் வீடு முழுக்க அந்த தண்ணீரை தெளித்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எந்தவிதமான கெட்ட சக்தியும், துர் சக்தியும் வீட்டை விட்டு வெளியேறும். ஏன் உங்கள் வீட்டிற்குள் கெட்ட சக்தி என்ன கெட்ட காற்று கூட நுழைய முடியாது அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது.

முனீஸ்வரர் எலுமிச்சை பழம் மத்துவம்

மேலும் முனீஸ்வரர் கோவிலில் எலுமிச்சம் பழம் மாலை கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அது மட்டுமில்லாமல் முனீஸ்வரரின் ஆயுதமான அரிவாள் நுனி பகுதியில் எலுமிச்சம் பழத்தை குத்தி வைத்திருப்பார்கள். இப்படி முனீஸ்வரன் அரிவாளில் குத்தி வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து வந்து அந்த எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து உங்கள் வீட்டில் உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு குடிக்க கொடுத்தால் உடல்நலம் ஆரோக்கியம் இல்லாமல் இருந்தவர்கள் வேகமாக தேறி வருவார்கள். மேலும் அந்த பழத்தை சரிபாதியாக வெட்டி இரண்டு பழத்திலும் குங்குமத்தை தடவி உங்கள் வீட்டின் நிலை வாசலில் இருபுறமும் வைக்கும்பொழுது நீங்கள் கையில் எடுக்கும் காரியங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் தடையாக வரும் அனைத்து தடைகளும் நீங்கும் அந்த அளவிற்கு இந்த எலுமிச்சம்பழம் மகத்துவம் வாய்ந்தது.

-விளம்பரம்-

எதிர்மறையான சிந்தனைகளை நீக்கும் முனீஸ்வரர்

அது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு எப்போதும் எதிர்மறையான சிந்தனைகள் மட்டும வந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் நபர்கள் முனீஸ்வரர் கோவிலில் சென்று முனீஸ்வரருக்கு அணிந்து இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி உங்கள் தலையை சுற்றி கீழே போட்டு உங்களின் இடது காலால் மிதிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களை பிடித்திருக்கும் தரித்திரம் நீங்கிவிடும். அதன் பிறகு எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு வராது நேர்மறையான சிந்தனைகளை மட்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

எதிரிகள் விலகுவார்கள்

முனீஸ்வரர் கோவிலில் உள்ள எலுமிச்சம் பழத்தை எடுத்து வந்து பயன்படுத்துவதால் மட்டும் தான் நமக்கு நன்மைகள் நடக்குமா என்று கேட்டால் இல்லை. முனீஸ்வரருக்கு எலுமிச்சையை மாலையாக கோர்த்து அணிவிப்பதன் மூலமாகவும் நமக்கு பல நன்மைகள் நடக்கும். ஆம் 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக கோர்த்து முனீஸ்வரனுக்கு நீங்கள் அனுபவிக்கும் போது உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தடையாய் இருக்கும் எதிரிகளை கூட உங்களை விட்டு விலகி விடுவார்கள் அந்த அளவிற்கு முனீஸ்வரர் சக்தி மிக்க காவல் தெய்வமாக விளங்குகிறார்.