பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவானால் இனி இந்த ராசிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள போகிறார்கள்!!
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ராசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சியடையும். செவ்வாய் பகவான் ஒவ்வொரு 45 நாள்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில், மொத்தமாக 12 ராசிகளிலும் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ஒரு சுழற்சி நிறைவடைய 22 மாதங்கள் எடுக்கும்.
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ராசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சியடையும். செவ்வாய் பகவான் ஒவ்வொரு 45 நாள்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில், மொத்தமாக 12 ராசிகளிலும் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ஒரு சுழற்சி நிறைவடைய 22 மாதங்கள் எடுக்கும். அந்த வகையில் நவகிரகங்களுள் ஒன்றான செவ்வாய் வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பிற்பகல் 1:56 மணி முதல் சந்திரனின் ராசியான கடக ராசிக்கு மாறுகிறார். கடக ராசிக்கு மாறும் செவ்வாய் பகவான் கீழ்நோக்கி நகர்கிறார். செவ்வாய் கடகத்தில் கீழ்நோக்கி நகரும் போது, அது பல ராசியினரின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், அதிலும் குறிப்பாக 3 ராசிகளுக்கு இந்த காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். பல சவால்களை எதிர்கொள்ள போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் மேஷத்தின் அதிபதி, ஆனால் செவ்வாய் பகவானின் இந்த இடப்பெயர்ச்சி மேஷ ராசியினர் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவும், செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் தடைகள், பதவி உயர்வில் தாமதம் போன்றவை ஏற்படும். உத்தியோகத்தில் சிரமங்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சச்சரவுகள் இருக்கலாம். குடும்பத்துடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணியில் சவால்கள் அதிகமாக இருக்கும்.
கடகம்
செவ்வாய் இந்த ராசியில் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களின் தன்னம்பிக்கை குறையலாம். மனஅழுத்தம் கூடும், சிறு விஷயங்களில் சச்சரவுகள் வரலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழிலில் உங்களின் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்காது. பணப் பற்றாக்குறை ஏற்படலாம், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியையும் செவ்வாய் ஆள்வதால் பெரிய பிரச்னைகள் ஏற்படும். வருமானம் குறைந்து செலவுகள் கூடும். கடன் அதிகரிக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள். கால்கள் மற்றும் மூட்டுகளில் வலி இருக்கலாம். வியாபாரிகள் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும், நஷ்டம் ஏற்படலாம். வேலையில் மாற்றம் பற்றி யோசிக்கலாம். மனைவியுடன் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். சகோதரருடன் மாற்று கருத்துகள் வந்து செல்லும்.
இதனையும் படியுங்கள் : அனைத்து ராசிகளுக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்