Advertisement
ஐஸ்

வீட்டில் இருக்கும் பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்தே சுவையான க்ரீமி ஐஸ்கிரீம் இப்படி செய்யலாம்!

Advertisement

ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதோடு சுலபமாக பாதாம் டிரிங் மிக்ஸை வைத்து வீட்டிலேயே எப்படி ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுவது என்பதை பார்க்க இருக்கிறோம். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பது ஐஸ்கிரீம் தான். மூன்று பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிட இருக்கிறோம். விரும்பிய நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றும் போதெல்லாம் இப்படி வீட்டில் செய்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம்களை எடுத்து சுவைத்து உண்ணும் பொழுது உணவின் மேல் இருக்கும் விருப்பம் நமக்கு தீர்ந்துவிடும்.

கடைக்கு சென்று வாங்க வேண்டுமே என்று எண்ணம் உள்ளவர்கள் எல்லாம் இதுபோன்று செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் நம்ம விருப்பம் போன்று எடுத்து உண்ணலாம். அது மட்டும் அல்ல  வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் ஐஸ்கிரீம்களை கொடுத்து மகிழ்விக்கலாம். இந்த சுவையான பாதாம் ஐஸ்கிரீமை உங்கள் விருப்பம் போல் இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் விருப்பம் இருப்பவர்கள் ஜெர்ரி போன்றவற்றையும் இந்த பாதாம் ஐஸ்கிரீம் சேர்த்து செய்து சாப்பிடும் பொழுது அவை மேலும் அதீத ருசியை நமக்கு கொடுக்கும். சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கிரீமியான ஐஸ்கிரீமை வீட்டில் செய்து குடும்பத்தாரோடு அமர்ந்து உண்ணும் பொழுது அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது. ஆகையால் இந்த பாதாம் டிரிங்க் ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பாதாம் மிக்ஸ் ஐஸ்கிரீம் | BadamMix Ice cream In Tamil

Print Recipe
பாதாம் டிரிங் மிக்ஸ்ல் சுவையான க்ரீமி விரும்பிய நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றும் போதெல்லாம் இப்படி வீட்டில் செய்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம்களை எடுத்து சுவைத்து உண்ணலாம். மேலும் விருப்பம் இருப்பவர்கள் ஜெர்ரி போன்றவற்றையும் இந்த பாதாம் ஐஸ்கிரீம் சேர்த்து செய்து சாப்பிடும் பொழுது அவை மேலும் அதீத ருசியை நமக்கு கொடுக்கும். சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கிரீமியான ஐஸ்கிரீமை வீட்டில் செய்து குடும்பத்தாரோடு அமர்ந்து உண்ணும் பொழுது
Advertisement
அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது. ஆகையால் இந்த பாதாம் டிரிங்க் ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Course Dessert
Cuisine tamil nadu
Keyword BadamMix Ice cream
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.067

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/2 லிட்டர் பால்
  • 5 ஸ்பூன் பாதம் டிரிங்ஸ் மிக்ஸ் பவுடர்
  • 2 ஸ்பூன் சோளமாவு
  • 100 மில்லி காய்ச்சிய பால்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில்  பாலை ஊற்றி
    Advertisement
    காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சோளமாவுடன்  100 மில்லி காயச்சி ஆற வைத்த பாலை ஊற்றி நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் கொதித்து கொண்டிருக்கும் பாலில்  கட்டிகள்எதுவும் இல்லாமல் கலந்து வைத்துள்ள சோள மாவு பால் கரைசலை பாலில் கலந்து நன்றாக கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்.
  • பால் நன்றாக கொத்தித்த பிறகு   பாதாம் டிரிங்ஸ் மிக்ஸ் 5 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.  சோளமாவும்பாதாம் டிரிங்ஸ் மிக்ஸ் பவுடரும் கலந்ததால்  பால்சீக்கிரமே திக்காக மாறி வரும். ஆகையால் நன்றாக கை விடாமல் கிளறி  கொண்டே  இருக்கவேண்டும்.
  • பால் நன்றாக திக் ஆனதும் பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும்.  ஆறியபாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒர் காற்று புகாத பாக்ஸில் போட்டு வைத்து ப்ரீஸ்சரில் 2 மணி நேரம் வைக்க வேண்டும்.2 மணி யநேரம் கழித்து எடுத்து மூடியை திறந்து பார்த்தால் ஐஸ்கிரீம் பதம் வர ஆரம்பித்தது இருக்கும்.
  • இப்போது மீண்டும் 2 மணி நேரம் ப்ரீஸ்சரில் வைத்த ஐஸ்கிரீமை மீண்டும்  மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்து மீண்டும் அதே காற்று புகாத பாக்ஸில் போட்டு 8 மணி நேரம் ப்ரீஸ்சரில் வைக்கும் வேண்டும்.
  • இதை நீங்கள் மதிய நேரத்தில் செய்தால்  இரவுமுழுக்க  ப்ரீஸ்சரில்வைத்தால் காலை சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும். எட்டு மணி நேரம் கழித்து ப்ரீஸ்சரில் இருக்கும் பாக்ஸ்ஸை எடுத்து மூடியை திறந்தால்  ருசியானபாதாம் ஐஸ்கிரீம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 0.067kcal | Carbohydrates: 16g | Fat: 1g | Sugar: 13g | Calcium: 11mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

1 மணி நேரம் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

5 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

5 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

6 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

16 மணி நேரங்கள் ago