பைகன் பார்தா என்ற வட இந்திய ரெசிபியை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்டா இருக்கும்!!
பைகன் பார்தா அப்படின்னா என்னன்னு நிறைய பேரு யோசிப்பீங்க இது ஒரு வட இந்திய ரெசிபி. பெரிய கத்திரிக்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இந்தியாவில் மட்டும் இல்லாம லண்டன் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பேமஸ். டே
பைகன் பார்தா அப்படின்னா என்னன்னு நிறைய பேரு யோசிப்பீங்க இது ஒரு வட இந்திய ரெசிபி. பெரிய கத்திரிக்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இந்தியாவில் மட்டும் இல்லாம லண்டன் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பேமஸ். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. பெரிய கத்திரிக்காய் கிடைக்கவில்லை என்றாலும் கூட சின்ன கத்திரிக்காய் வச்சு கூட செய்யலாம்.
டேஸ்ட் சூப்பராகவே இருக்கும். கத்தரிக்காயை மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊற வைத்து பொரித்து எடுத்து நல்லா மசித்து செய்ய வேண்டும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சைடு டிஷ் கூட தேவைப்படாது. தேவைப்பட்டால் அப்பளம் வத்தல் கூட பொரித்து சாப்பிடலாம். சாதம் மட்டும் இல்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். பழைய சாதம், சுடு கஞ்சி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
ஒரு சிலருக்கு கத்திரிக்காய் வச்சு காரக்குழம்பு கத்திரிக்காய் கூட்டு கத்திரிக்காய் பொரியல் செஞ்சு சாப்பிட பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு கத்திரிக்காய் சுத்தமா பிடிக்காது. அவங்களே கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க.சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸூக்கு வைத்து கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க.அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தவா வறுவல்