சத்தான அதேசமயம் ருசியான இந்த வாழைப்பூ மடல் சட்னி செய்து பாருங்கள் இதன் சுவை 10 இட்லிக்கும் மேலாக சாப்பிட வைக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யுங்கள். இதுவரை நீங்கள் வாழைப்பூவை வைத்து பொரியல், வடை என்று தான் செய்து

By Prem Kumar · 10/6/2024

இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யுங்கள். இதுவரை நீங்கள் வாழைப்பூவை வைத்து பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வாழைப்பூவில் உள்ள தோலை (மடல்) வைத்து சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்னது வாழைப்பூ தோலில் சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், வாழைப்பூ தோலைக் கொண்டு அருமையான சுவையில் சட்னியை செய்யலாம்.

இந்த சட்னி சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். வாழைப்பூவில் மட்டுமல்லாமல் அதன் தோலிலும் அதிகமான மருந்துவ குணங்கள் உள்ளன. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட வாழைப்பூ மடலை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். மேலும் இது வயிற்றுப்புண்கள், செரிமான பிரச்சனை, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவற்றிற்கும் நல்ல தீர்வை தரும்.

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வாழைப்பூ மடல் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.

இதனையும் படியுங்கள் : அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

Recipes AMP · Quick view
View full