இன்று உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான சட்னி செய்யுங்கள். இதுவரை நீங்கள் வாழைப்பூவை வைத்து பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வாழைப்பூவில் உள்ள தோலை (மடல்) வைத்து சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்னது வாழைப்பூ தோலில் சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், வாழைப்பூ தோலைக் கொண்டு அருமையான சுவையில் சட்னியை செய்யலாம்.
இந்த சட்னி சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். வாழைப்பூவில் மட்டுமல்லாமல் அதன் தோலிலும் அதிகமான மருந்துவ குணங்கள் உள்ளன. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட வாழைப்பூ மடலை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். மேலும் இது வயிற்றுப்புண்கள், செரிமான பிரச்சனை, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவற்றிற்கும் நல்ல தீர்வை தரும்.
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த வாழைப்பூ மடல் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும்.
வாழைப்பூ மடல் சட்னி | Banana Flower Bract Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 வாழைப்பூ மடல்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 துண்டு வெல்லம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 4 வர மிளகாய்
- 1 துண்டு புளி
செய்முறை
- முதலில் வாழைப்பூ மடலை நன்றாக கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்சி ஜாரில் வேக வைத்த வாழைப்பூ மடல், வறுத்த கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ மடல் சட்னி தயார். இந்த சட்னி தோசை, இட்லிக்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!