Advertisement
சைவம்

புதுவிதமான சுவையுடன் வாழைப் பூ சப்பாத்தி செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நம் இரவு நேரங்களில் எண்ணெய் அதிகம் இல்லாத உணவுகள் அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளை உணவாக உட்கொள்ளுவோம். அதுவும் தொடர்ந்து ஒரே மாதிரியான வகையில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நமக்கு சலித்து போய் விடும். அதற்காக சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்துவதற்கு பதிலாக வேறு வகையில் சப்பாத்தியை செய்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். நாம் இன்று வாழைப்பூவை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். மேலும் தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

வாழைப் பூ சப்பாத்தி | Banana Flower Sappathi Recipe in Tamil

Print Recipe
பொதுவாக நம் இரவு நேரங்களில் எண்ணெய் அதிகம் இல்லாத உணவுகள் அல்லது சப்பாத்தி போன்ற உணவுகளை உணவாக உட்கொள்ளுவோம். அதுவும் தொடர்ந்து ஒரே மாதிரியான வகையில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நமக்கு சலித்து போய் விடும். அதற்காக சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்துவதற்கு பதிலாக வேறு வகையில் சப்பாத்தியை செய்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். நாம் இன்று வாழைப்பூவை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். மேலும் தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்
Course dinner
Cuisine Indian, TAMIL
Keyword Banana Flower Sappathi, வாழைப் பூ சப்பாத்தி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 மாவு பிசைய அகல பாத்திரம்
  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 பூரிக்கட்டை

Ingredients

  • 50 கிராம் பாசிபருப்பு
  • 250 KG கோதுமை மாவு
  • 1 கப் வாழைப் பூ
  • 8 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • ½ tbsp சீரகம்
  • 2 tbsp தயிர்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் வாழைப்பூவின் உள்ளிருக்கும் நாரை நீக்கிவிட்டு பொடி பொடியாக நறுக்கி
    Advertisement
    வைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பு சேர்த்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
  • பின்பு தண்ணீரை வடிகட்டி எடுத்துவிட்டு கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பு போட்டு அதனுடன் வாழைப் பூ, பூண்டு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  • பின் நாம் சேர்த்துள்ள பொருட்களின் பச்சை வாடை போகும் வரை கிளறிவிட்டு நன்கு வதக்கவும்.பின் அனைத்தும் நன்றாக வதக்கியதும் கடாயை இறக்கி வைத்து விடுங்கள்.
  • பின் நாம் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வைக்கவும். சிறிது நேரம் கழித்து பொருட்கள் குளிர்ந்த உடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மை போல் அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, தயிர், உப்பு கலந்த தண்ணீர் போன்றவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  • சப்பாத்தி மாவு தயாராகிய பின் வழக்கம் போல் உருண்டை பிடித்து பூரி கட்டையில் தேய்த்து கல்லில் போட்டு சப்பாத்தியா எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் வாழைப்பூ சப்பாத்தி இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Carbohydrates: 53g | Protein: 26g | Fat: 8g | Sodium: 270mg | Fiber: 2g | Sugar: 5g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

30 நிமிடங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

36 நிமிடங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

58 நிமிடங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

4 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

4 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago