மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பூ வடை இப்படி செய்து கொடுத்து அனைவரையும் குஷி படுத்துங்கள்!
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
வாழை மரத்தின் பல பாகங்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது வாழைக்காய் கொண்டு பொரியல் மற்றும் சாம்பார் செய்யப்படுகிறது. வாழைத்தண்டு பலவிதங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. வாழைப்பூ பொரியல், மற்றும் வாழைப்பூ கூட்டு மிகவும் பிரபலமான மதிய உணவு வகை. அதேபோல வாழைப்பூ கொண்டு வடையும் செய்யலாம்.
தென்னிந்திய உணவுகளில் வடைக்கு எப்போதுமே இடம் உண்டு. விசேஷ நாட்கள் என்றாலே கண்டிப்பாக உளுந்து வடை அல்லது மசால் வடை இலையில் இருக்கும். சாமிக்கு படியல் போடும் போதும் கண்டிப்பாக வடை இருக்கும். அதுவே ஸ்நாக்ஸ் என்றால் முதலில் தோன்றுவது வாழைப்பூ வடை தான். பெரும்பாலான பிள்ளைகள் வாழைப்பூ என்றாலே நோ சொல்லி விடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வாழைப்பூ வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.