வாழைப்பழம் வீட்டில் இருந்தால் போதும் சுவையான வாழைப்பழ போளி இப்படி செஞ்சி பாருங்கள்!

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற

By Prem Kumar · 3/9/2024

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது சுவையான போளி செய்து குடுங்கள்.

போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. போளி ஒரு இனிப்பான, வாயில் போட்டால் கரையும் இனிப்பு வகையாகும். இது சாமிக்கு பிரசாதமாக வைக்கப்படுகிறது. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் பேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு பேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. ஆங்கிலத்தில் sweet stuffed lentil flatbread என்று அழைக்கப்படும் இவை மகாராஷ்டிரத்தில் Puran போளி என்றும், கேரளாவில் உப்பிட்டு என்றும், ஆந்திராவில் ஒளிகா என்றும், குஜராத்தில் வெட்மி என்றும் அழைக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இந்த ஹொலிகே தசரா பண்டிகை காலங்களில் கன்னடர்களின் பாரம்பரிய பலகாரங்களில் கட்டாயம் இடம்பெறும். இந்த டிஷ்ஷில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், இதை 15 நாட்கள் வரை கூட எடுத்து வைத்திருந்து சாப்பிடலாம். இது செய்வதற்கு மிகவும் எளிமையானதும் கூட. இந்த சுவையான வாழைப்பழ போளியை தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.

இதையும் படியுங்கள் : தூத்துக்குடி ஸ்பெஷல் சுவையான மக்ரூன் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full