4 வாழைப்பழம் வீட்டில் இருந்தால் போதும் சுவையான வாழைப்பழ போளி இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது சுவையான போளி செய்து குடுங்கள்.

-விளம்பரம்-

போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. போளி ஒரு இனிப்பான, வாயில் போட்டால் கரையும் இனிப்பு வகையாகும். இது சாமிக்கு பிரசாதமாக வைக்கப்படுகிறது. குறிப்பாக இவை கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் மிகவும் பேமஸ். இது எந்த அளவுக்கு அங்கு பேமஸ் என்றால் இவை இல்லாத திருமண விருந்துகளே அங்கு காண முடியாது எனும் அளவுக்கு. ஆங்கிலத்தில் sweet stuffed lentil flatbread என்று அழைக்கப்படும் இவை மகாராஷ்டிரத்தில் Puran போளி என்றும், கேரளாவில் உப்பிட்டு என்றும், ஆந்திராவில் ஒளிகா என்றும், குஜராத்தில் வெட்மி என்றும் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இந்த ஹொலிகே தசரா பண்டிகை காலங்களில் கன்னடர்களின் பாரம்பரிய பலகாரங்களில் கட்டாயம் இடம்பெறும். இந்த டிஷ்ஷில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், இதை 15 நாட்கள் வரை கூட எடுத்து வைத்திருந்து சாப்பிடலாம். இது செய்வதற்கு மிகவும் எளிமையானதும் கூட. இந்த சுவையான வாழைப்பழ போளியை தயாரித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.

Print
5 from 2 votes

வாழைப்பழ போளி | Banana poli recipe in tamil

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது சுவையான போளி செய்து குடுங்கள். போளி இந்தியாவில் செய்யப்படும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. போளி ஒரு இனிப்பான, வாயில் போட்டால் கரையும் இனிப்பு வகையாகும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: snacks, sweets
Cuisine: Indian
Keyword: poli
Yield: 5 People
Calories: 105kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 வாழைப்பழம்
  • 3 கப் கோதுமை மாவு
  • 6 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 கப் ரவை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு                              தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் பாகு வெல்லம்

அரைக்க

  • 10 முந்திரிப் பருப்பு
  • 10 பாதாம்
  • 4 ஏலக்காய்      

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸியில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் அதே மிக்சியில் முந்திரி, பாதாம், ஏலக்காய் சேர்த்து பொடித்து தனியாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், வெல்ல பாகு, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் சேர்த்து ரவையை வறுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள பழம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • இவை நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  • பின் மாவை சிறு சிறு உருண்டை உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் வாழைப்பழ பூரணத்தை வைத்து தேய்த்து கொள்ளவும்.
  • அதன்பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் போளியை தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ போளி தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 105kcal | Carbohydrates: 27g | Protein: 7.3g | Fat: 0.4g | Sodium: 7mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Sugar: 12g | Calcium: 35mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : தூத்துக்குடி ஸ்பெஷல் சுவையான மக்ரூன் இப்படி செஞ்சி பாருங்க!