வாரம் ஒரு முறை இப்படி வாழைத்தண்டு அடை சுட்டு சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே ஆரோக்கியமான தோசை ரெசிபி அதே நேரம் சுவைக்கும் பஞ்சமில்லை!
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விட
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைத்தண்டு அடை ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். இப்போது பெரும்பாலானவர்கள் இருக்கும் சிறுநீரக கல் பிரச்சனைக்கு வாழைத்தண்டு ஒரு அருமருந்து. ஆனால் வாழைதண்டை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இது போல அடையாக செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா ருசியான காளான் வாழைத்தண்டு சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!