இரவு டிபனுக்கு வாழைத்தண்டு ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய

By ·

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன.

 வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே! ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன். இது பொதுவாக சாம்பார், சட்னியுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது செய்வதற்கு மிகவும் எளிதானது, அதேநேரம் ஆரோக்கியமானதும் கூட. உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால் நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் செய்யலாம்.

பொதுவாக தோசையை தான் பலர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் அந்த தோசையை சற்று தடிமனாக ஊற்றினால், அதனையே ஊத்தாப்பம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் இது தடிமனாக இருப்பதாலேயே. ஆனால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை பயன்படுத்தி, ஊத்தாப்பம் செய்து கொடுத்தால், அனைவருமே ஊத்தாப்பத்தை விரும்பி சாப்பிடுவர்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை