பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து கொடுத்தால்! ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!

கோலா உருண்டை குழம்பு என்றவுடன் எல்லார் நினைவுக்கு வருவது மட்டன் மற்றும் சிக்கன்‌ கோலா உருண்டை தான். ஆனால் இப்போது புரட்டாசி மாதம் பிறந்த காரணத்தினால் அசைவ உணவு சாப்பிட முடியாது. அதனால் இன்று மட்டன் கோலா உருண்டைக்கே ஈடு கொடுக்கும் அளவிற்க்கு சுவையான பீட்ரூட் கோலா உருண்டை எப்படி செ

By Prem Kumar · 4/10/2023

கோலா உருண்டை குழம்பு என்றவுடன் எல்லார் நினைவுக்கு வருவது மட்டன் மற்றும் சிக்கன்‌ கோலா உருண்டை தான். ஆனால் இப்போது புரட்டாசி மாதம் பிறந்த காரணத்தினால் அசைவ உணவு சாப்பிட முடியாது. அதனால் இன்று மட்டன் கோலா உருண்டைக்கே ஈடு கொடுக்கும் அளவிற்க்கு சுவையான பீட்ரூட் கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.

பெண்களுக்கு பீட்ரூட் பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் உடலில் இரத்தம் அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூடை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ருட்டைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இந்த பீட்ரூட் உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். பொதுவாக பீட்ரூட் போன்ற காயினை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் சமைத்து தந்தால்  சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.இந்த உருண்டை குழம்பு சாதத்திற்கு ஊற்றி சாப்பிட ஒரு நல்ல தேர்வு மற்றும் நல்ல மாற்றாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full