குபேரர் சிலை வீட்டில் இருப்பதால் ஏற்படக்கூடிய சில விஷயங்கள்

வாஸ்து சாஸ்திரம் ஒரு சிலருக்கு சரியாக இல்லை என்றால் வீட்டில் எதிர்பாராத விதமாக பல வகையான கஷ்டங்கள் வரும்.வாஸ்து சாஸ்திரங்களின்படி நம் வீட்டில் வைக்கின்ற ஒரு சில பொருட்களால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலும் அதே சமயத்தில் ஒரு சில பொருட்களால் எதிர்மறை ஆற்றலும் கிடைக்கும். அந்த வகையில் சி

By Prem Kumar · 7/8/2024

வாஸ்து சாஸ்திரம் ஒரு சிலருக்கு சரியாக இல்லை என்றால் வீட்டில் எதிர்பாராத விதமாக பல வகையான கஷ்டங்கள் வரும்.வாஸ்து சாஸ்திரங்களின்படி நம் வீட்டில் வைக்கின்ற ஒரு சில பொருட்களால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலும் அதே சமயத்தில் ஒரு சில பொருட்களால் எதிர்மறை ஆற்றலும் கிடைக்கும். அந்த வகையில் சிரித்துக் கொண்டிருக்கும் குபேரர் சிலையை நம் வீட்டில் வைத்திருப்பது நல்லதா அல்லது கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவு பார்க்கலாம்.

சிரிக்கும் புத்தர்

குபேரர் சிலை சிரிக்கும் புத்தராக மகிழ்ச்சியின் சின்னமாக உள்ளது. கன்னங்கள் குண்டாக சிரிக்கும் புத்தர் சிலைகள் இந்த உலகம் முழுவதிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றது. வீட்டில் புத்தர் சிலையை வைப்பதால் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் ஏற்படுவதாக கருதப்படுகிறது. வீட்டில் குபேரர் சிலைகள் இருந்தால் அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் குபேரர் எப்பொழுதுமே பணம் மூட்டையோடு தான் இருப்பார் பணத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரர் சிலையை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் செழிக்கும்.

புன்னகையை கொடுக்கும் குபேரர் சிலை

நம்மை அறியாமல் குபேர சிலையை சிறிது நேரம் பார்த்தால் நம் முகத்தை சிரிப்பு வரும் அதுவும் நேர்மறையான சிறப்பாக இருக்கும் அந்த நேர்மறையான சிரிப்பில் உண்மையான அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்று நம்பப்படுகிறது அதனால் தான் குபேரர் சிலைக்கு நேர்மறை ஆற்றலை தரக்கூடிய சிலை என்று ஒரு பெயர் உள்ளது.

குபேர சிலையை வைக்க வேண்டிய இடம்

காலை எழுந்ததும் குபேரர் சிலையை பார்த்தால் அந்த நாள் மிகவும் அதிர்ஷ்ட நாளாக அமையும் எனவே குபேரர் சிலையை வீட்டில் கதவுக்கு அருகே வைப்பது வாஸ்துபடி மிகவும் சிறந்தது. இதனால் வீட்டிற்குள் நுழைந்த உடன் குபேரரை பார்த்து ஒரு நேர்மறையான புன்னகையை வெளிப்படுத்த முடியும் அதே போல் வெளியே புறப்படும் போதும் குபேரர் சிலையை நம்மால் பார்த்து புன்னகைக்க முடியும். அதேபோல் இந்த சிலையை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாமா என்று கேட்டால் கண்டிப்பாக கூடாது நம் கண்களில் படும் இடங்களில் தான் இந்த குபேரர் சிலையை வைக்க வேண்டும்.

குறிப்பாக வெறும் தரையில் குபேர சிலையை வைக்கக்கூடாது அதேபோல் வெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த இடங்களிலும் குபேரர் சிலையை வைக்கக்கூடாது. டிவி பிரிட்ஜ் போன்ற இடங்களிலும் அழகு பொருளாக கூட குபேர சிலையை வைக்கக்கூடாது காலணிகளை வைக்கும் இடங்களிலும் குபேரர் சிலையை வைக்கக்கூடாது.

இதனையும் படியுங்கள் : நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

Recipes AMP · Quick view
View full