மூக்கடைப்பில் இருந்து விடுவிக்கும் சாதாரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!

ஓமம்… நறுமணப்பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல் அறைகள்ல உள்ள அஞ்சறைப்பெட்டிகள்ள ஓமம் கண்டிப்பா இருக்கும். ஓமத்தை உணவுப்பொருள்கள்ல அதிகமா சேர்க்கலைன்னாலும் அப்பப்போ மருந்துக்குழம்பு செய்றதுக்கும், வறுத்து சாப்பிடுறதுக்கும் பயன்படுத்துவாங்க. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்ச

By Maria Bellsin · 14/12/2022

ஓமம்… நறுமணப்பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல் அறைகள்ல உள்ள அஞ்சறைப்பெட்டிகள்ள ஓமம் கண்டிப்பா இருக்கும். ஓமத்தை உணவுப்பொருள்கள்ல அதிகமா சேர்க்கலைன்னாலும் அப்பப்போ மருந்துக்குழம்பு செய்றதுக்கும், வறுத்து சாப்பிடுறதுக்கும் பயன்படுத்துவாங்க. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், கரோட்டின்னு பல சத்துகள் உள்ள இந்த ஓமம் மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைகளுக்கு நல்ல மருந்து. அதேமாதிரி செரிமானக்கோளாறு, வயிற்றுவலின்னு பல பிரச்சினைகளை சரிபண்றதுக்கு உதவியா இருக்கும்.

மூக்கடைப்பு சைனஸ் பிரச்சினை

மழைக்காலங்கள்ல பலபேருக்கு மூக்கடைப்பு தொல்லை இருக்கும். சிலபேருக்கு சைனஸ் பிரச்சினை வந்து ரொம்ப கஷ்டப்படுத்தும். இந்தமாதிரி நேரங்கள்ல அரை ஸ்பூன் ஓமத்தை எடுத்து வறுத்து பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பொடியாக்கி ஒரு மெல்லிசான பருத்தித் துணியில வச்சி ஒரு பொட்டலம் கட்டி வச்சிக்கிடணும். அதை அப்பப்போ மூக்குல வச்சி மோந்து பார்த்துட்டு வந்தா மூக்கடைப்பு சரியாகும், சைனஸ் தொந்தரவுகளும் சரியாகும். மூச்சுவிட முடியாதவங்ககூட இதை முயற்சி பண்ணிப்பார்த்தா பலனை உணர முடியும்.

நெஞ்சுச்சளி ஆஸ்துமா

ஜலதோஷம், மூக்கடைப்பு, சளித் தொந்தரவு இருக்கிறவங்க குளிக்கிறதுக்கு முன்னாடி ஓமத்தை வறுத்துப் பொடியாக்கி தலையில வச்சி குளிச்சா அந்த தொல்லையில இருந்து விடுபடலாம். ஆஸ்துமா, நெஞ்சுச்சளியால அவதிப்படுறவங்களுக்கும் ஓமம் நல்ல மருந்து. அதே மாதிரி சாம்பிராணி புகை காட்டும்போது ஓமத்தையும் தீக்கங்குகள்ல போட்டு சுவாசிக்கலாம். புகைமூட்டம் போடும்போது ஓமத்தை சேர்த்து புகையைக் காட்டினா கொசு விலகிப்போயிரும். வெறும் வெள்ளைப்பூண்டு தோலையும் ஓமத்தையும் புகை காட்டினாலே கொசுக்கள் விலகிரும்.

வாய்வுத்தொல்லை

பசி எடுக்காம அவதிப்படுறவங்க, வயிற்றுவலியால சிரமப்படுறவங்க, வாய்வுத்தொல்லையால அவதிப்படுறவங்கன்னு பலபேருக்கு ஓமம் நல்ல மருந்து. ஓமத்தை வறுத்து வெல்லம், கருப்பட்டி இல்லன்னா நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். ஓமத்தை தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கு, வாழைக்காய் சாப்பிட்டா அது வாய்வை உண்டாக்கி ரொம்ப தொல்லை கொடுக்கும். முக்கியமா சிலபேருக்கு வயிறு உப்பிக்கிட்டு ரொம்ப சிரமப்படுவாங்க. இது சின்னக்குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சினைதான். அந்தமாதிரி நேரங்கள்ல ஓமம் அற்புதமா வேலை செய்யும்.

லேகியம்

ஓமத்தை வறுத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிக்கலாம். இல்லன்னா ஓமத்தை கருப்பட்டி சேர்த்து லேகியம் செஞ்சும் சாப்பிடலாம். ஓமம், பூண்டு, திப்பிலி, மிளகு எல்லாத்தையும் சம அளவு எடுத்து வறுத்து அரைச்சி ஒரு உருண்டையா தயார் பண்ணி நிழல்ல காய வச்சி சாப்பிட்டு வந்தாலும் நல்லது. இந்தமாதிரி சாப்பிட்டு வந்தா குழந்தைகளுக்கு வரக்கூடிய மாந்தக்கோளாறுகள்கூட சரியாகும். ஓமம் சாப்பிட்டா நல்லா பசி எடுக்கும். இன்னைக்கி சூழல்ல பலபேர் பசியெடுக்கலைன்னு சொல்லி என்னென்னவோ மருந்து, மாத்திரையெல்லாம் சாப்பிடுறாங்க. அப்படிப்பட்டவங்க ஓமம் சாப்பிட்டு வந்தா அதுக்கு நல்லாவே உதவியா இருக்கும்.

எடை குறைக்க உதவும்

உடல் எடையை இயற்கையா குறைக்கணுன்னு நினைக்கிறவங்க தினசரி உணவுல ஓமத்தைச் சேர்த்துட்டு வந்தா நல்லது. ஓம வாட்டர்னு சொல்லக்கூடிய ஓமத்தீநீரும் நல்லதுதான். ஓமத்தைப் பொடியாக்கி மோரோட சேர்த்துக் குடிச்சிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உடல் சோர்வா இருக்கும்போதும், சோம்பேறித்தனமா இருக்கும்போதும் ஓம வாட்டர் குடிச்சா தெம்பா இருக்கலாம். பல் வலிச்சா ஓமம் எண்ணெயை பஞ்சில நனைச்சி வலி உள்ள இடத்துல வச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

மருத்துவ ஆலோசனை

இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள ஓமத்தை இனிமே சாதாரணமா நினைக்காதீங்க. குறைஞ்ச விலையில ஓமம் கிடைக்கிறதால வீட்டுல வாங்கி வச்சி பயன்படுத்துங்க. அதை எப்படி பயன்படுத்தணுன்னு நல்லா தெரிஞ்சி பயன்படுத்துங்க. சந்தேகம் இருந்தா மருத்துவர்கள்கிட்ட கேட்டு பயன்படுத்துங்க.

Recipes AMP · Quick view
View full