Advertisement
உடல்நலம்

நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, பல பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவதின் அற்புத மூலிகை டீ!

Advertisement

பூனை மீசை… இந்த எழுத்துகளை பார்த்தவுடனே பூனையோட மீசையான்னு நீங்க கேள்வி கேட்கத்தோணும். பூனை மீசைங்கிறது ஒரு மூலிகையோட பேரு. பல பேருக்கு இந்த மூலிகையைப் பத்தி தெரியாது. ஆனா, சிறுநீரகம்… அதாவது கிட்னி ஃபெய்லியர் ஆனவங்கள்ல சில பேருக்கு இந்த மூலிகையைப் பற்றி தெரிஞ்சிருக்கலாம். பூனை மீசை மூலிகைக்கு சீரகத் துளசின்னும் வேற ஒரு பெயர் இருக்கு. பொதுவா இந்த மூலிகையுல டீ செஞ்சி குடிக்கிறது வழக்கம். .

பூனை மீசை மூலிகை டீ

பூனை மீசை மூலிகைக்கு ஜாவா டீன்னும் சொல்வாங்க. அதேமாதிரி கிட்னி டீன்னும்கூட சொல்றாங்க. ஏற்கெனவே சொன்னமாதிரி பூனை மீசை மூலிகையில டீ செய்றது ரொம்ப சாதாரணமான விஷயம். தினமும் ரெண்டு தடவை பூனை மீசை மூலிகை டீயை குடிச்சிட்டு வந்தா நமக்கு தேவையான பலன் கிடைக்கும். அடிப்படையில பூனை மீசை மூலிகை டீக்கு ரத்தத்தை சுத்திகரிக்கிற தன்மை இருக்கு. ரத்தம் சுத்தமானாலே உடல் நிலை சீராகிறதோட பல நோய்கள் சரியாகும். அதுமட்டுமில்ல முக்கியமா சிறுநீரகம் சிறப்பாக செயல்படுறதுக்கு இந்த மூலிகை உதவியா இருக்கும்.

Advertisement

கிட்னி ஃபெய்லியர்

இன்னைக்கி சூழல்ல சிறுநீரகச் செயலிழப்புன்னு சொல்லக்கூடிய கிட்னி ஃபெய்லியர் பிரச்சினை பல பேருக்கு இருக்கு. அதை சரி பண்றதுக்கு இந்த பூனை மீசை மூலிகை ரொம்பவே உதவியா இருக்கும். சிறுநீரை அதிகரிக்கக்கூடிய தன்மையும் இந்த மூலிகைக்கு இருக்கு. அதே மாதிரி உடல்ல உள்ள தேவையில்லாத கெட்ட நீரையும், தேவையில்லாத உப்புகளையும் சிறுநீர் மூலமாக வெளியேத்திரும். இப்படி வெளியேத்துறதுனால பல நோய்கள் சரியாகும். முக்கியமா சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும்.

மாதவிடாய்க்கோளாறு போக்கும்

சர்க்கரை நோயாளிகள் இதை பயன்படுத்துனா அவங்களும் இயல்பா இருக்கலாம். சர்க்கரை நோயாளிகள் காபி, டீ குடிக்கிறது நல்லது இல்ல. அவங்க இந்த பூனை மீசை

Advertisement
மூலிகையில டீ தயாரிச்சி குடிச்சிட்டு வந்தா அவங்களோட பல பிரச்சினைகள் சரியாகும். ரத்த அழுத்தம் இயல்பு நிலையில இருக்கிறதுக்கும் இந்த மூலிகை உதவியா இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகுறதுக்கும், சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், கல்லீரல் அலர்ஜி, காய்ச்சல்னு பல பிரச்சினைகளுக்கும் ஜாவா டீன்னு சொல்லக்கூடிய பூனை மீசை மூலிகை ரொம்பவே உதவியா இருக்கும்.

உடல் எடை குறைக்கும்
Advertisement

பூனை மீசை மூலிகையோட மருத்துவ குணத்தை சொல்லிக்கிட்டே போகலாம். ஃபேட்டி லிவர்ன்னு சொல்லக்கூடிய கல்லீரலில் கொழுப்பு படியும் பிரச்சினை பலபேருக்கு இருக்கு, குடிப்பழக்கத்தாலயும், தவறான உணவுப்பழக்கத்தாலயும் இந்த ஃபேட்டி லிவர் பிரச்சினை வருது. இதை சரிபண்றதுக்கும் பூனை மீசை மூலிகை பயன்படுது. உடல் எடையைக் குறைக்கிறதுக்கும் இந்த மூலிகை ரொம்ப உதவியா இருக்கும். உடல் எடையைக் குறைக்கிறதுக்கு என்னென்னவோ சிகிச்சை எடுக்கிறவங்க பூனை மீசை மூலிகையை சாப்பிட்டு பார்த்தா அதோட பலனை உணரலாம்.பூனை மீசை மூலிகையை சாதாரணமா எடை போடாதீங்க. வாத நோய், புற்றுநோய்க்குக்கூட இது மருந்தாகும்.

கிரீன் டீ

பூனை மீசை மூலிகை டீயை வழக்கமான டீ மாதிரி கொதிக்க வைக்க வேண்டாம். பாத்திரத்துல தண்ணி ஊத்தி நல்லா கொதிச்சதும் அடுப்பை அணைச்சிடணும். உடனே அந்த தண்ணியில ஒரு ஸ்பூன் இல்லன்னா தேவைக்கேத்த மாதிரி பூனை மீசை மூலிகையைப்போட்டு 5 நிமிஷம் கழிச்சி வடிகட்டி குடிக்கணும். கிரீன் டீ மாதிரி அப்பிடியே குடிக்கலாம். இனிப்பு தேவைன்னா தேன், பனைவெல்லம் இல்லன்னா நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

Advertisement
Maria Bellsin

Recent Posts

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

55 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

4 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

13 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

14 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

16 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

21 மணி நேரங்கள் ago