உணவு உண்பதற்கான சிறந்த திசை!!

சாஸ்திரங்களின் படி நாம் உணவு உண்ணும் திசையை பொறுத்து ஆரோக்கியம் மாறுபடும். பொதுவாக சாப்பிடும் பொழுது இப்படித்தான் அமர வேண்டும் யாரிடமும் பேசக்கூடாது என்று பல விஷயங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் பலர் கையை கீழே ஊன்றி சாப்பிடக்கூடாது கால் நீட்டிக்கொண்டு சாப்பிடக்கூடாது என்று பல வகையான

By ·

சாஸ்திரங்களின் படி நாம் உணவு உண்ணும் திசையை பொறுத்து ஆரோக்கியம் மாறுபடும். பொதுவாக சாப்பிடும் பொழுது இப்படித்தான் அமர வேண்டும் யாரிடமும் பேசக்கூடாது என்று பல விஷயங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் பலர் கையை கீழே ஊன்றி சாப்பிடக்கூடாது கால் நீட்டிக்கொண்டு சாப்பிடக்கூடாது என்று பல வகையான விஷயங்களை கூறியிருப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது நமக்கு எந்தெந்த ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

கிழக்கு திசை

கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உணவு உண்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்திரனுக்கு உரிய திசை என்பதால் உடல் நல கோளாறு இருந்தாலும், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது சிறப்பானது. நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் உதவியாக இருக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சியும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

மேற்கு திசை

மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது மகாலட்சுமி தேவியின் அருளை பரிபூரணமாக நமக்கு கொடுக்கும். மேற்கு திசையில் மகாலட்சுமி தேவியார் ஆட்சி செய்வதால் அந்த திசை நோக்கி அமர்ந்து நாம் சாப்பிடும் பொழுது செல்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வியாபாரம் தொழில் போன்றவற்றில் சிறந்து விளங்க இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது உகந்தது. உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் வீட்டில் உறவினர்கள் இருக்கும் பொழுது அந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது பகையை வளர்க்கும்.

வடக்கு திசை

வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடும்போது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். இந்த திசை சிவனுக்கு உரிய திசை என்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மேலும் குபேரனுக்கு உரிய திசையும் என்பதால் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். பண பற்றாக்குறையால் சிரமப்படுபவர்கள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது செல்வத்தை அதிகரித்து கொடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடலாம்.

தெற்கு திசை

தெற்கு திசை எமதர்மனுக்கு உரிய திசை எனவே இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது நீண்ட ஆயுளையும் அழியாத புகழையும் செல்வாக்கையும் அதிகரித்து கொடுக்கும். எதிர்மறையான சிந்தனைகளை எதிர்த்து போராட மனக்குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. தெற்கு திசை முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும் நமக்கு கொடுக்கும் எனவே இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

ஒவ்வொரு திசைக்கும் இருக்கக்கூடிய ஒவ்வொரு பலன்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த விஷயமாகும் எனவே உங்களுடைய சவுகரியத்தை பொறுத்து நீங்கள் உங்களுக்கு உகந்த திசையில் அமர்ந்து சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : எந்த திசையில் கற்றாழை வைத்தால் நல்லது

Recipes AMP · Quick view
View full