பிரியாணி கத்திரிக்காய் இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா டேஸ்டா செஞ்சு பாருங்க!!
பிரியாணியில் பல வகைகள் இருக்க பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பா அரிசி பிரியாணி அப்படின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரியாணி ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில பாஸ்மதி அரிசி பிரியாணிக்கு எல்லா ரெஸ்டாரண்ட்லையுமே எல்லா கடைகளிலுமே கத்திரிக்காய் பச்சடி தருவாங்க. இது கொஞ்சம் வித்தியாசம
பிரியாணியில் பல வகைகள் இருக்க பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பா அரிசி பிரியாணி அப்படின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரியாணி ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில பாஸ்மதி அரிசி பிரியாணிக்கு எல்லா ரெஸ்டாரண்ட்லையுமே எல்லா கடைகளிலுமே கத்திரிக்காய் பச்சடி தருவாங்க. இது கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த டேஸ்டான கத்திரிக்காய் கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதை வீட்டிலேயே எப்படி செய்வது என்று ஒரு சிலருக்கு குழப்பமா இருக்கும் ஒரு சிலர் வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து ரொம்பவே கஷ்டப்பட்டு இதை செய்வாங்க ஆனா இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.
வெங்காயம் தக்காளி எதுவுமே இல்லாம இந்த ரெசிபிய சூப்பரா செய்யலாம். வேர்க்கடலை வெள்ளை எள் மிளகு சீரகம் இது எல்லாத்தையும் வறுத்து அரைச்சு சேர்க்கும்போதுதான் இந்த பிரியாணி கத்தரிக்காய்க்கு ஒரு தனி சுவையே கிடைக்கும். இது கூட புளிக்கரைசல் சேர்த்து செய்யும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ரெசிபியை பிரியாணிக்கு மட்டுமில்லாமல் சுட சுட சாதத்துக்கு போட்டு செய்து சாப்பிடலாம் அவ்ளோ அருமையா இருக்கும். வீட்ல வெங்காயம் தக்காளி இல்லாத சமயத்துல இந்த ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இந்த ரெசிபியை சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். இனிமேல் வீட்டிலேயே பாஸ்மதி அரிசி பிரியாணி செஞ்சு அதுக்கு இந்த கத்திரிக்காயை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் கண்டிப்பாக ருசியாக இருக்கும் இதுக்கு நம்ம கடையில போய் வாங்க அவசியமே கிடையாது. இப்ப வாங்க இந்த ருசியான பிரியாணி கத்திரிக்காய் ரெசிபி கடையில் கிடைக்கிற மாதிரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு