ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறு பாகற்காய் 65 ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! டீ & காப்பியுடன் சாப்பிட ருசியான ஸ்நாக் ரெசிபி!

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பாகற்காயை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு

By Prem Kumar · 6/3/2024

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பாகற்காயை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. அப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாகற்காயை வெறுத்தால், ஒரு முறை இது போல செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பாகற்காய் 65 மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க சிறந்த சாய்ஸ். பாகற்காய் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் கே, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயானது நமக்கு பல விதங்களில் ஆரோக்கிய நலன்களை தருகிறது. இது உணவுப் பையில் இருக்கும் பூச்சியைக் கொல்லும். இயற்கையாக பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. மேலும் இது பித்தத்தைத் தணிக்கும். இந்த பாகற்காய் 65 இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும். இதை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகையான உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் 65 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பாகற்காய் முட்டை புர்ஜி ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full