ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறு பாகற்காய் 65 ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! டீ & காப்பியுடன் சாப்பிட ருசியான ஸ்நாக் ரெசிபி!

- Advertisement -

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பாகற்காயை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. அப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாகற்காயை வெறுத்தால், ஒரு முறை இது போல செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பாகற்காய் 65 மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க சிறந்த சாய்ஸ். பாகற்காய் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் கே, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.

-விளம்பரம்-

பாகற்காயானது நமக்கு பல விதங்களில் ஆரோக்கிய நலன்களை தருகிறது. இது உணவுப் பையில் இருக்கும் பூச்சியைக் கொல்லும். இயற்கையாக பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. மேலும் இது பித்தத்தைத் தணிக்கும். இந்த பாகற்காய் 65 இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும். இதை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகையான உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் 65 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.

- Advertisement -
Print
3 from 1 vote

பாகற்காய் 65 | Bitter Gourd 65 Recipe In Tamil

நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால் பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று பாகற்காயை வைத்து சூப்பரான மொறுமொறுப்பான 65 செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பாகற்காயை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. அப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாகற்காயை வெறுத்தால், ஒரு முறை இது போல செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பாகற்காய் 65 மாலை நேரங்களில் தேநீருடன் சேர்த்து சுவைக்க சிறந்த சாய்ஸ்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Bitter Gourd 65
Yield: 3 People
Calories: 42kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய பாகற்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பாகற்காயை நன்கு கழுவி விட்டு வட்ட வடிவத்தில் மெலிதாக நறுக்கி உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் கலந்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அதன்பிறகு அதே வாணலியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக பொரித்து பாகற்காயுடன் சேர்த்து பரிமாறவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான, மொறு மொறுப்பான பாகற்காய் 65 தயார். இதை எல்லா வெரைட்டி ரைஸ் உடன் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 42kcal | Carbohydrates: 5.4g | Protein: 9g | Fat: 1.2g | Sodium: 13mg | Potassium: 8mg | Fiber: 2.5g | Vitamin A: 9IU | Vitamin C: 130mg | Calcium: 8mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பாகற்காய் முட்டை புர்ஜி ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!