Home ஸ்நாக்ஸ் மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை...

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம். நமது கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு பண்டம் குழி பனியாரம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இதனை எளிதாக செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம். குழிப்பனியாரத்திற்கான மாவில் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளில் பணியாரம் செய்யலாம்.

-விளம்பரம்-

நாம் இப்போது வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்குடிய உணவுகளில் குழி பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்து கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக அதே நேரம் ஆரோக்கியமான முறையில் செய்து விடலாம்.

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பணியாரத்தை ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். ஆரோக்கியம் நிறைந்த இந்த வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
No ratings yet

வாழைப்பழ பணியாரம் | Banana Paniyaram Recipe In Tamil

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம். நமது கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு பண்டம் குழி பனியாரம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இதனை எளிதாக செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம். குழிப்பனியாரத்திற்கான மாவில் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளில் பணியாரம் செய்யலாம். நாம் இப்போது வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Banana Paniyaram
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 குழிபணியார கல்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1/4 கப் உளுந்து
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 2 ஏலக்காய்
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 3 வாழைப்பழம்
  • 1/4 கப் ரவை
  • 4 டேபிள் ஸ்பூன் வெல்லம்

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு அலசி விட்டு ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். ‌மாவு அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் இவற்றை கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின் இந்த மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள மாவில் வாழைப்பழ விழுது, துருவிய தேங்காய், ரவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 7.2g | Fat: 2.6g | Sodium: 95mg | Potassium: 358mg | Fiber: 4.5g | Sugar: 1.9g | Vitamin A: 73IU | Vitamin C: 87mg | Calcium: 14mg | Iron: 6.2mg

இதனையும் படியுங்கள் : குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!