பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு விதமான குணம், திறமை இருக்கும். அனைவரின் வாழ்க்கையிலும் பெண்களின் பங்கு என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் துணை எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை சொர்க்கமா அல்லது நரகமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். சிலர் அமைதியானவர்களாக இருப்பார்கள், சிலரோ தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள், சிலர் சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் வேலையில், தொழிலில் தனது திறனையினால் பெரிய உச்சங்களை எட்டி, குறுகிய காலத்தில் சாதனை அடைவார்கள். பெண்களின் இந்த அடிப்படை குணத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் ராசி மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் ராசியின் அடிப்படையில் வாழ்க்கையில் உச்சம் தொடும் பெண்கள் யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசி பெண்கள் ஆதிக்கம் மற்றும் வலிமையைக் கொண்டவர்கள். இயற்கையில் பிடிவாதமும் ஆர்வமும் உள்ளவர்கள். கடின உழைப்பின் அடிப்படையில், ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்களாகவும் எந்த பிரச்சினைக்கும் இலகுவில் தீர்வு கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவர்கள். இந்த திறமையால், அவள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்து, குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெறுகிறார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசி பெண்கள் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் கொண்டவர்கள். தனக்காகவும், தான் நேசிப்பவர்களுக்காகவும் நிற்கும் துணிவும் தைரியமும் கொண்டவர்கள். இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தோற்கவே விரும்ப மாட்டார்கள். அதனால் தான் வெற்றிக்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள். தொலைநோக்கு பார்வை கொண்டதால், எதிர்காலத்திற்கான திட்டங்களை முன்கூட்டியே உருவாக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இவர்கள் வாழ்வில் சிறந்த இடத்தை அடைய அதிகமாக சிரமப்பட தேவையில்லை. இவர்களை தேடி வெற்றி வந்தே ஆகும்.
மிதுனம்

மிதுன ராசி பெண்கள் படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய கற்பனை ஆற்றல் அவர்களை பல உயரத்திற்கு அழைத்து செல்லும். வெற்றி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தன்மை கொண்டவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் மற்ற பெண்களால் பெற முடியாத சிறந்த வாழ்க்கையை பெறுவார்கள். இவர்கள் இயல்பிலேயே இருக்கும் பிடிவாதமும், ஆளுமையும் ஒருநாள் இவர்கள் நினைத்ததை நடத்தி முடிக்க துணைப்புரியும். கற்பனை செய்வதை நிஜமாக்கும் ஆற்றல் இவர்களிடம் கட்டாயம் இருக்கும். மேலும், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர் நிலையை அடைய எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
கடகம்

கடக ராசி பெண்கள் ஒரு நடமாடும் புதிர் போன்றவர்கள். இவர்கள் இலக்காக நிர்ணயித்த அனைத்தையும் அடைந்தே ஆகுவார்கள். இயல்பிலேயே தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இது எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் ஆற்றலை கொடுக்கின்றது. தான் வேலை செய்வதோடு, மற்றவர்களிடம் இருந்து வேலையை எப்படி வாங்குவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். பணியிடத்தில் மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி காட்டும் திறன் கொண்டவர்கள். இதன் காரணமாக, அவரது வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைகிறார்.
கும்பம்

கும்ப ராசி பெண்கள் கனவு காண்பவர்கள் மற்றும் போராளிகள். கும்ப ராசிப் பெண்கள் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்களாகவும், தங்கள் லட்சியங்களை அடைவதில் அமைதியற்றவர்களாகவும் இருப்பார்கள். நேர்மையின் பாதையைப் பின்பற்றவே விரும்பும் இவர்கள், காரணமாக பெரிய வெற்றியைப் பெறும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அதை நிச்சயம் அடைந்தே ஆவார்கள். இவர்களுக்கு வெற்றி சாதாரணமாகவே கிடைத்துவிடும். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வெற்றி பாதையை நோக்கி செல்வார்கள். அதனால், இளம் வயதிலேயே வெற்றியின் உச்சத்தை அடைகிறார்கள்.
இதனையும் படியுங்கள் : மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்


