நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட சமையலில் இருந்து ஏதாவது புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம். விதவிதமாக செய்து ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அதேவேளையில் ஆரோக்கியத்தில் சமரசம் கூடாது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு செய்ய வேண்டும் என்று எண்ணுவோம்.
வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிட வெஜிடபிள் அவல் கட்லெட் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தபின் சாப்பிட ஏற்ற சிம்பிள் ஸ்நாக்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் அவலில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் வெஜிடபிள் அவல் கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். கட்டாயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் இந்த வெஜிடபிள் அவல் கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெஜிடபிள் அவல் கட்லெட் | Vegetable Poha Cutlet Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் அவல்
- 1 கேரட்
- 2 பெரிய வெங்காயம்
- 1/4 கப் பீன்ஸ்
- 1 குடைமிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- 3 உருளைக்கிழங்கு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் அவலை நன்கு தண்ணீரில் அலசி ஊற வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கறிகள் பாதி வெந்தவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் ஊற வைத்துள்ள அவல், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் சிறிதளவு இந்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டி சிறிதளவு தட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை அடுப்பில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் அவல் கட்லெட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்டில் கொஞ்சம் அவல் இருந்தால் போதும் மொறு மொறு அவல் வடை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!