கசப்பே தெரியாத பாகற்காய் பூண்டு மசாலா வறுவல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காது. நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. பாகற

By Prem Kumar · 19/9/2025

பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காது. நம் அனைவருக்கும் பாகற்காய் என்றாலே கசப்பு மட்டும்தான் ஞாபகம் வரும். ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. பாகற்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் கே, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயானது நமக்கு பல விதங்களில் ஆரோக்கிய நலன்களை தருகிறது. இது உணவுப் பையில் இருக்கும் பூச்சியைக் கொல்லும். இயற்கையாக பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. மேலும் இது பித்தத்தைத் தணிக்கும். இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பாகற்காய் என்றால் பிடிக்காதா? அப்படிப்பட்டவர்களை பாகற்காய் சாப்பிட வைக்க வேண்டும் என்றால் இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த ஸ்டைலில் பாகற்காய் வறுவல் செய்யும் போது, அதில் கசப்பு எதுவும் தெரியாது மற்றும் மிகவும் ருசியாகவும் இருக்கும். இதை வெறுமனே சாப்பிடலாம் அதுவும் இப்படி பாகற்‌காய் வறுவலை செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் சுவையான பாகற்காய் பூண்டு மசாலா வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கிராமத்து பாகற்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!

Recipes AMP · Quick view
View full