ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளி காரம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பாகற்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், அதன் கசப்புச் சுவை காரணமாக பலரும் அதனைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பாகற்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின்

By Prem Kumar · 7/11/2025

பாகற்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றாலும், அதன் கசப்புச் சுவை காரணமாக பலரும் அதனைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பாகற்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு காய்கறி, இது அதிக அளவு நார்ச்சத்து, இதில் வைட்டமின்-சி, வைட்டமின் ஏ, இரும்பு, வைட்டமின் கே, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. பாகற்காயானது நமக்கு பல விதங்களில் ஆரோக்கிய நலன்களை தருகிறது. இது உணவுப் பையில் இருக்கும் பூச்சியைக் கொல்லும். இயற்கையாக பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.

மேலும் இது பித்தத்தைத் தணிக்கும். இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காயில் பல விதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். ஆனால் ஒரு முறை ஆந்திரா ஸ்டைலில் வெங்காயம் மற்றும் மசாலாவுடன் செய்யப்படும் இந்த பாகற்காய் உள்ளி காரம் ரெசிபியை செய்து பாருங்கள் புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து கசப்பை மறைத்து, அபாரமான சுவையை தரும். இந்த ரெசிபி சாதம், சப்பாத்தி, தோசை அல்லது ரொட்டி போன்றவற்றுக்கு ஒரு அற்புதமான சைட் டிஷ். இந்த டேஸ்டான ருசியான ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாரும் சாதம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான பாகற்காய் உள்ளி காரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கிராமத்து பாகற்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!

Recipes AMP · Quick view
View full