ஹெல்தியான கருப்பு உளுந்து சாதம் வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க!!

குழந்தைகளுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு இனிமேல் தினமும் ஏதாவது ஒரு டிஃபரண்டான ரெசிப்பீஸ் டிபன் பாக்ஸ்க்கு செஞ்சு கொடுக்கிற மாதிரி இருக்கும். எப்பவுமே குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம் லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமாகவும் அ

By Prem Kumar · 16/6/2025

குழந்தைகளுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு இனிமேல் தினமும் ஏதாவது ஒரு டிஃபரண்டான ரெசிப்பீஸ் டிபன் பாக்ஸ்க்கு செஞ்சு கொடுக்கிற மாதிரி இருக்கும். எப்பவுமே குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம் லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் ஏதாவது செஞ்சு கொடுக்கணும். அந்த வகையில இன்னைக்கு நம்ம கருப்பு உளுந்து வச்சு ஒரு சூப்பரான கருப்பு உளுந்து சாதம் செய்ய போறோம்.

இந்த கருப்பு உளுந்த நல்லா வறுத்து அது கூட சில பொருட்களை சேர்த்து அதனையும் நல்லா வறுத்து ஆற வச்சு அரைச்சு பொடி செஞ்சு வச்சுக்கிட்டு இந்த சாதம் செய்யும் போது வாசனையா இருக்கும். இந்த பொடியை நம்ம அரைச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம் ஆனா பிரெஷா அப்ப செஞ்சு சாதம் போட்டு கிளறினா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக கருப்பு உளுந்து கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது.

கருப்பு உளுந்து வச்ச கஞ்சி, கருப்பு உளுந்து துவையல் இதெல்லாம் செய்யலாம் ஆனா அது பிடிக்காதவங்களுக்கு கருப்பு உளுந்தை நல்லா வறுத்து இந்த மாதிரி சாதம் செஞ்சு கொடுத்தா ரொம்ப சூப்பரா இருக்கும் விரும்பியும் சாப்பிடுவாங்க. இந்த கருப்பு உளுந்து சாதம் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும் இந்த டேஸ்டான கருப்பு உளுந்து சாதத்தை கண்டிப்பாக வீட்டில் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான டேஸ்டான கருப்பு உளுந்து சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மூட்டு வலி வந்தா இந்த உளுந்து பால் செஞ்சு குடிங்க மூட்டு வலி பறந்து போயிடும்!

Recipes AMP · Quick view
View full