சுரைக்காய் ஆட்டு குடல் கறி குழம்பு ருசியாக சுலபமாக இப்படி கூட செய்யலாம்!
மட்டன் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது சூடு இல்லாதது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆகையால் இந்த மட்டனில் உள்ள அனைத்து உறுப்புகளும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதவிதமான உணவு வகைகளை ஆட்டின் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஆட்
மட்டன் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது சூடு இல்லாதது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆகையால் இந்த மட்டனில் உள்ள அனைத்து உறுப்புகளும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதவிதமான உணவு வகைகளை ஆட்டின் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஆட்டுக்குடலை வைத்து சுரைக்காய் உடன் சேர்த்து எப்படி குழம்பு செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம். ஆட்டுக்குடலுக்கு உடலில் உள்ள செரிமான உறுப்புகளை சரிப்படுத்துவதற்கு மிகவும் பயன்படுகிறது.
வயிற்றில் புண் இருப்பவர்கள் இந்த ஆட்டுக்குடலை சமைத்து சாப்பிடும் பொழுது அவர்களுக்கு வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கு நல்ல மருந்தாக உதவும். ஆட்டுக்குடலில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது குடல் இயக்கத்தையும் செரிமான மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. ஆட்டுக்குடலில் கால்சியம், மெக்னீசியம், கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் ஏ, விட்டமின் ஈ,.விட்டமின் டி மற்றும் விட்டமின் கே விட்டமின் பி 12 போன்றவை இருப்பதால் இவை உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கின்றன.
குடல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. விட்டமின் பி12 இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டின் குடல் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகும். இந்த சத்துக்கள் எல்லாம் நம் உடலுக்கு தேவையான அதிக நன்மைகளை கொடுக்கின்றன. இந்த குடலோடு சுரைக்காய் சேர்த்து சமைக்கும் பொழுது மேலும் அதிக நன்மைகள் கிடைக்கின்றன. சுரைக்காய் ஒரு நீர்காய். நீர்க்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது தேவையில்லாத நீர் வெளியேற்றும். கால் வீக்கங்கள் எல்லாம் குறைவதோடு கொழுப்பையும் கரைத்து விடும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த சுவையான சுரைக்காய் ஆட்டு குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.